தந்தை பெரியாராலேயே பாராட்டப்பட்ட தமிழ் இதழியலின் பிதாமகர் சி.பா.ஆதித்தனார்: தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின்
'செயற்கரிய செய்த பெரியார்' எனத் தந்தை பெரியாராலேயே பாராட்டப்பட்ட தமிழ் இதழியலின் பிதாமகர் சி.பா.ஆதித்தனார் என தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சி.பா.ஆதித்தனாரின் 122-வது பிறந்த நாள்
'செயற்கரிய செய்த பெரியார்' எனத் தந்தை பெரியாராலேயே பாராட்டப்பட்ட தமிழ் இதழியலின் பிதாமகர் சி.பா.ஆதித்தனார் அவர்களின் பிறந்தநாள்!
தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் புகழாரம்
பாமரரும் உலக நடப்புகளைப் படித்தறிய ஏதுவாக எளிய மொழிநடையில் இதழியலை மாற்றியவர். இருமுறை தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்; பேரறிஞர் அண்ணா முதலமைச்சரானபோது சட்டப்பேரவைத் தலைவர்; முத்தமிழறிஞர் கலைஞரின் அமைச்சரவையில் அமைச்சர் எனத் தடம் பதித்தவர்.
தமிழ் மொழிக்கும் தமிழ் இதழியலுக்கும் தமிழ்ச் சமூகத்துக்கும் ஐயா ஆதித்தனார் அவர்கள் ஆற்றிய பணிகளை இந்நாளில் நினைவுகூர்ந்து போற்றுகிறேன்!
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.