📅 Tuesday, 08 September 2026 IST | ஆவணி 23, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Business September 08, 2026 04:04 PM

தங்கம் விலை கிராமுக்கு ரூ.140 உயர்வு: வெள்ளி விலையில் மாற்றமில்லை

தங்கம் விலை கிராமுக்கு ரூ.140 உயர்வு: வெள்ளி விலையில் மாற்றமில்லை

சென்னை: தங்கம் விலை இன்று கிராமுக்கு ரூ.140 உயர்ந்துள்ளது. வெள்ளி விலையில் 6-வது நாளாக இன்றும் மாற்றமில்லை.

சர்வதேச பொருளாதார மற்றும் அரசியல் சூழல், கச்சா எண்ணெய் விலை, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, தங்கத்தின் மீதான முதலீடு, உலக பங்குச் சந்தை செயல்பாடு உள்ளிட்டவற்றின் அடிப்படையில் தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்படுகிறது.

உலக அளவில் தங்கத்தை இறக்குமதி செய்யும் நாடுகளில் இந்தியா முன்னணியில் உள்ளது. அமெரிக்கா - ஈரான் இடையிலான மோதலின் தாக்கம் உலக பொருளாதாரத்தில் எதிரொலித்து வருகிறது. அது சர்வதேச அளவில் தங்க விற்பனையிலும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த மே மாதம் தங்கத்தின் மீதான சுங்க வரியை 6 சதவீதத்தில் இருந்து 15 சதவீதமாக மத்திய அரசு உயர்த்தியது. அதோடு கடந்த 1-ம் தேதி நாட்டு மக்களிடம் தேவையின்றி தங்கம் வாங்காதீர்கள் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். இதையடுத்து தங்கம் விலை சந்தையில் ஏற்ற இறக்கத்துடன் விற்பனை ஆகிறது.

இன்றைய விலை விவரம்: இந்தச் சூழலில் சென்னையில் இன்று காலை வர்த்தகம் தொடங்கியதும் 22 காரட் ஆபரணத் தங்கம் விலை கிராமுக்கு ரூ.140 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.14,270-க்கு விற்பனையாகிறது. பவுனுக்கு ரூ.1,120 உயர்ந்து, ஒரு பவுன் ரூ.1,14,160-க்கு விற்பனையாகிறது.

24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூ.15,567-க்கு விற்பனையாகிறது. 18 காரட் தங்கம் ஒரு கிராம் ரூ.12,040-க்கு விற்பனையாகிறது.

வெள்ளி விலையை பொறுத்தவரையில் இன்று மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.255-க்கும், கட்டி வெள்ளி ஒரு கிலோ ரூ.2,55,000-க்கும் விற்பனையாகிறது. கடந்த 3-ம் தேதியில் இருந்தே வெள்ளி விலை தொடர்ந்து கிராம் ரூ.255-க்கு விற்பனையாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.