Tamil Nadu
September 27, 2026 07:03 AM
தமிழகத்தில் இன்னும் 3 மாதங்களில் மின்வெட்டு முழுமையாக சரி செய்யப்படும்: அமைச்சர் நிர்மல் குமார் உறுதி
மதுரை: ''மின் துறையில் எங்கெங்கு தவறுகள் உள்ளனவோ, அவை கண்டறியப்பட்டு சரி செய்யப்பட்டு வருகிறது. இன்னும் 3 மாதங்களில் மின்வெட்டு முழுமையாக சரி செய்யப்படும்,'' என, மின்துறை அமைச்சர் நிர்மல்குமார் கூறினார்.
மதுரையில் அவர் கூறியதாவது: தி.மு.க., அரசு, 'ஜெம்' வீரமணி வழக்கை கையாண்ட விதம் தவறானது. இவ்விவகாரத்தில் அக்கட்சி அதிகமாக எதிர்வினையாற்றுவது, இவ்வழக்கில் ஏதோ தவறு இருப்பதை காட்டுகிறது. வீரமணியை காப்பாற்ற தி.மு.க.,வினர் நினைக்கின்றனர். வீடியோவில் போதிய ஆதாரம் இல்லை எனக்கூறி, முன்னாள் சட்ட அமைச்சர் ரகுபதி கடந்து சென்றுள்ளார்; இது, சாதாரணமாக கடந்து செல்லும் விஷயமல்ல.
என்ன செய்தார்
3 மாதங்களில்...!
தொடர்புடைய செய்திகள்
Tamil Nadu