📅 Thursday, 15 October 2026 IST | புரட்டாசி 29, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Tamil Nadu October 15, 2026 01:02 PM

தமிழகம், புதுச்சேரியில் தொடங்கியது வடகிழக்கு பருவமழை

தமிழகம், புதுச்சேரியில் தொடங்கியது வடகிழக்கு பருவமழை

வடகிழக்கு பருவமழை தொடங்கியதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை கடந்த ஜூன் மாதம் தொடங்கிய நிலையில், 'எல்நினோ' தாக்கத்தால் மழை அதிகம் பெய்யவில்லை. எதிர்பார்த்த மழை இல்லாததால் பல இடங்களில் நீர்நிலைகள் வறண்டு கிடக்கின்றன.

இந்தநிலையில் தென்மேற்கு பருவமழை கடந்த ஓரிரு தினங்களுக்கு முன்பு விலக தொடங்கியது. அடுத்ததாக வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கான சூழல் இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து வந்தது.

இந்தநிலையில் தென்மேற்கு பருவமழை நாட்டின் மீதமுள்ள பகுதிகளில் இருந்து இன்று முழுவதுமாக விலகுவதற்கான சூழல் உருவாகி வருகிறது. அதேநேரத்தில் வடகிழக்கு பருவமழை தென்னிந்தியாவின் தென்பகுதிகளில் தொடங்குவதற்கான சாதகமான நிலை காணப்படுகிறது.

இந்தநிலையில், தமிழகம், புதுச்சேரியில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதாக இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது. வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ள நிலையில், தமிழகத்தில் அநேக இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.

வடகிழக்கு பருவமழை காலம் வருகிற டிசம்பர் மாதம் வரை காணப்படும். இந்த ஆண்டு எல்நினோ தாக்கத்தால் மழைப்பொழிவு அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.