📅 Friday, 18 September 2026 IST | புரட்டாசி 2, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Politics September 18, 2026 04:33 PM

திரிணாமுல் காங்கிரஸ் பெயர், சின்னம் முடக்கம்: தேர்தல் ஆணையம்

திரிணாமுல் காங்கிரஸ் பெயர், சின்னம் முடக்கம்: தேர்தல் ஆணையம்

புதுடெல்லி: திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் பெயரையும் அதன் அதிகாரபூர்வ ‘இரட்டை மலர்’ சின்னத்தையும் இடைக்கால நடவடிக்கையாக இந்தியத் தேர்தல் ஆணையம் முடக்கியுள்ளது.

இதனால், மேற்கு வங்கத்தில் நந்திகிராம், ரேஜினகர் ஆகிய இரு தொகுதிகளுக்கு நடைபெற உள்ள சட்டமன்ற இடைத்தேர்தலில் மம்தா பானர்ஜி தலைமையிலான அணியும் ரிதப்ரதா பானர்ஜி தலைமையிலான அணியும் திரிணாமுல் காங்கிரஸ் பெயரையோ, அதன் சின்னத்தையோ பயன்படுத்த முடியாது.

மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தல் தோல்விக்குப் பிறகு, திரிணாமுல் காங்கிரஸ் கட்சி இரண்டாகப் பிரிந்தது. முன்னாள் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான சிறுபான்மை அணியினரும், எதிர்க்கட்சித் தலைவர் ரிதப்ரதா பானர்ஜி தலைமையிலான பெரும்பான்மை சட்டமன்ற உறுப்பினர்களும் தங்களது தரப்பே உண்மையான திரிணாமுல் காங்கிரஸ் என்று கூறி தேர்தல் ஆணையத்திடம் மனு அளித்தனர்.

இரு அணிகளிடமும் வியாழக்கிழமை (செம்டம்பர் 17) ஆணையம் விசாரணை நடத்திய பின்னர், சின்னங்கள் ஒதுக்கீட்டு உத்தரவின் பிரிவு 15ன் கீழ் விரிவான விசாரணை நிலுவையில் உள்ளதால், தற்காலிக நடவடிக்கையாக பெயர், சின்னத்தை முடக்குவதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது.

அதைத்தொடர்ந்து, மம்தா பானர்ஜி பிரிவுக்கு ‘கால்பந்து வீரர்’ சின்னத்தை ஒதுக்கியதுடன். ‘மம்தா அகில இந்திய திரிணமூல் காங்கிரஸ்’ என மம்தா தரப்பு கட்சிக்கு புதிய பெயரை ஆணையம் அங்கீகரித்துள்ளது. அரூப் ராய், ரிதப்ரதா பானர்ஜி தரப்புக்கு ‘ஜனநாயக திரிணமூல் காங்கிரஸ்’ என்ற பெயரையும் அஞ்சல் உறை சின்னத்தையும் ஆணையம் அங்கீகரித்துள்ளது.

கட்சிகளைப் பிளவு படுத்தும் பாஜக

இதற்கிடையே, பாஜகவும் தேர்தல் ஆணையமும் கைகோத்து கட்சிகளைப் பிளவுபடுத்துவதாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.

முதலில் சிவசேனை, அடுத்து தேசியவாத காங்கிரஸ், தற்போது திரிணமூல் காங்கிரஸ். பாஜகவும் தேர்தல் ஆணையமும் கைகோத்து ஒரு கட்சியைப் பிளவுபடுத்துகின்றன. பின்னர், கட்சியின் சின்னமும் பறிக்கப்படுகிறது என்று காங்கிரஸ் எம்பியும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல், தனது எக்ஸ் பக்கத்தில் பதிவில் சாடியுள்ளார்.

“வாக்குத் திருட்டு; அரசாங்கத் திருட்டு; தற்போது கட்சியும் திருடப்படுகிறது. இவை நம்முடைய ஜனநாயக வீழ்ச்சியின் அடையாளமாக மாறிவிட்டன. தேர்தல் ஆணையத்தின் அரசியலமைப்பு ரீதியிலான பொறுப்பு, மக்களின் தீர்ப்பைப் பாதுகாப்பதுதான். ஆனால், மக்கள் தீர்ப்பை மதிக்காதோருக்கு எதிராகவே தேர்தல் ஆணையம் செயல்பட்டு வருகிறது,” என்று அவர் கூறினார்.

இவையும் உங்களுக்குப் பிடிக்கலாம்

இது மமதா பானர்ஜியின் போராட்டம் மட்டுமல்ல. ஒவ்வொரு அரசியல் கட்சியினதும் நியாயமான தேர்தல்களை விரும்பும் ஒவ்வொரு வாக்காளரினதும் போராட்டம் என்று ராகுல் பதிவிட்டுள்ளார்.