📅 Thursday, 15 October 2026 IST | புரட்டாசி 29, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Politics October 14, 2026 08:04 PM

தேர்தல் ஆணையருக்கு எதிரான வழக்கு: ராகுல் காந்தி மனுவில் 14 குறைகளை சுட்டிக்காட்டிய உச்ச நீதிமன்றம்

தேர்தல் ஆணையருக்கு எதிரான வழக்கு: ராகுல் காந்தி மனுவில் 14 குறைகளை சுட்டிக்காட்டிய உச்ச நீதிமன்றம்

புதுடெல்லி: தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்கு​மார் மீது நடவடிக்கை கோரி​யும், எஸ்​ஐஆர் முறை​கேடு​களை சுட்டிக்காட்டியும் எதிர்க்​கட்​சித் தலை​வர் ராகுல்​காந்தி உள்​ளிட்ட இண்​டியா கூட்​டணி கட்சி தலை​வர்​கள் சார்​பில் உச்ச நீதிமன்றத்தில் தாக்​கல் செய்​யப்​பட்ட மனு​வில் 14 குறை​கள் இருப்ப​தாக உச்ச நீதிமன்ற பதிவகம் சுட்​டிக்​காட்​டி​யுள்​ளது.

எதிர்​கட்​சித் தலை​வர் ராகுல் காந்தி மற்​றும் கூட்​டணி கட்​சித் தலை​வர்​கள் திங்​கட்​கிழமை மாலை பேரணி​யாக சென்று உச்ச நீதி​மன்​றத்​தில் இந்​திய தேர்​தல் ஆணை​யம், தலைமை தேர்​தல் ஆணை​யர் மற்​றும் இரு தேர்​தல் ஆணை​யர்​களுக்கு எதி​ராக ரிட் மனு தாக்​கல் செய்​தனர். அந்த மனுவை தாக்​கல் செய்த 11 மனு​தா​ரர்​களில் 9 பேருக்கு வக்​காலத்து இணைக்​கப்​பட​வில்லை என்​றும், வழக்கு தாக்​கல் செய்​வதற்​கான நீதி​மன்ற கட்​ட​ணத்​தில் 220 ரூபாய் குறை​வாக செலுத்​தப்​பட்​ட​தாக​வும், மனுவுக்​கான இணைப்பு ஆவணங்​கள் இல்லை என்​பது உட்பட 14 குறைபாடுகள் உள்​ளதை உச்சநீதி​மன்ற பதி​வாளர் அலு​வல​கம் சுட்​டிக்​காட்டி உள்​ளது.

குறிப்​பாக, காங்​கிரஸ் தலை​வர் மல்​லி​கார்​ஜுன கார்​கே​வின் அடை​யாள அட்​டை​யின் தெளி​வான நகலைக் கோரி​யுள்​ளது. அது​போல, சவு​கதா ராய், அகிலேஷ் யாதவ், தேஜஸ்வி யாதவ் உள்ளிட்ட 11 பேரின் வக்​காலத்தை தாக்​கல் செய்ய கோரி​யுள்​ளது.

மேலும் எஸ்​ஐஆர் நடவடிக்கை தொடங்​கு​வது குறித்த தேர்​தல் ஆணை​யத்​தின் ஜூன் 24, 2025 தேதி​யிட்ட முடிவு மற்​றும் வாக்காளர் நீக்​கங்​கள் தொடர்​பான பிற பதிவு​களின் பென்​-டிரைவில் உள்ள டிஜிட்​டல் நகல்​கள் உட்பட துணை ஆவணங்களின் தெளி​வான நகல்​களை கோரி​யுள்ள உச்ச நீதிமன்ற பதிவகம், தனிப்​பட்ட நபர்​களான ஞானேஷ் குமார், சுக்பீர் சிங் சந்​து, விவேக் ஜோஷி உள்​ளிட்​டோரை எதிர்​மனுதாரர்களாக சேர்த்​துள்​ளது ஏன்? என்​பது குறித்த விளக்கத்தையும் கேட்டுள்​ளது.

இவ்​வாறான 14 குறை​பாடு​கள் சரிசெய்​யப்​பட்ட பின் உச்ச நீதிமன்ற பதிவாளர் அலுவலகம் இம்மனுவை வி​சா​ரணைக்கு பட்டியலிடும்​ என்​று எதிர்​பார்க்​கப்​படுகிறது.