📅 Saturday, 03 October 2026 IST | புரட்டாசி 17, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Cinema October 03, 2026 09:03 PM

தாராபுரத்தில் முதலமைச்சர் விஜய் நாளை ரோடு ஷோ

தாராபுரத்தில் முதலமைச்சர் விஜய் நாளை ரோடு ஷோ

தாராபுரத்தில் முதலமைச்சர் விஜய் நாளை ரோடு ஷோ - ஏற்பாடுகள் தீவிரம்

கோயம்புத்தூரில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் தாராபுரம் செல்லும் முதலமைச்சர் விஜய், பிரச்சார வாகனத்தில் ரோடு ஷோ மேற்கொள்கிறார்.

Published : October 3, 2026 at 3:26 PM IST

திருப்பூர்: தாராபுரம் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நாளை (அக.04) ரோடு ஷோ மேற்கொள்ளவுள்ள நிலையில் ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

தமிழ்நாட்டில் தாராபுரம் (தனி), மதுராந்தகம் (தனி) ஆகிய இரண்டு சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வாக்குப்பதிவு வரும் அக்.06-ஆம் தேதியும், வாக்கு எண்ணிக்கை அக்.09-ஆம் தேதியும் நடைபெறவுள்ளது. இடைத்தேர்தலுக்கான பிரச்சாரம் நாளை (அக்.04) மாலையுடன் நிறைவடையவுள்ள நிலையில் அரசியல் கட்சிகளின் தலைவர்கள், கட்சிகளின் நிர்வாகிகள், தொண்டர்கள், வேட்பாளர்கள், பொதுமக்களை நேரில் சந்தித்து தீவிர வாக்குச்சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்த வகையில், தாராபுரம் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் தமிழக வெற்றிக் கழகத்தின் வேட்பாளர் சத்தியபாமாவை ஆதரித்து செப்.30- ஆம் தேதி தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், முதலமைச்சருமான விஜய் பரப்புரை மேற்கொண்டிருந்தார். இதையடுத்து, நாளை (அக்.04) தாராபுரம் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் ரோடு ஷோ மேற்கொள்ளவுள்ளார்.

முதலமைச்சரின் ரோடு ஷோ விவரங்கள்

நாளை (அக்.04) காலை சென்னை விமான நிலையத்தில் இருந்து தனி விமானம் மூலம் முதலமைச்சர் விஜய், கோயம்புத்தூருக்கு வருகை தருகிறார். பின்னர் அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் தாராபுரம் செல்கிறார். அதைத் தொடர்ந்து, மாருதி நகரில் இருந்து பிரச்சார வாகனத்தில் ரோடு ஷோ மேற்கொள்கிறார். தாராபுரம் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் சுமார் 30 கிலோ மீட்டர் தூரத்திற்கு முதலமைச்சர் விஜய், ரோடு ஷோ மேற்கொள்ளவுள்ளதாக கூறப்படுகிறது.

பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்

முதல்வரின் வருகைக்காக தாராபுரம் அருகே மாருதி நகர் பகுதியில் ஹெலிபேட் அமைக்கப்பட்டுள்ளது. ஹெலிபேட் அமைக்கப்பட்டுள்ள இடத்தில் பொதுப்பணித்துறை அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். முதலமைச்சரின் வருகையையொட்டி மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகளையும் காவல்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். முதலமைச்சர் ரோடு ஷோ மேற்கொள்ளும் சாலைகளில் தடுப்புகள் அமைக்கும் பணிகளும் நடைபெற்று வருகின்றன. தாராபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் காவல்துறையினர் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

நேற்று (அக்.02) மதுராந்தகம் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் தவெக வேட்பாளர் மரகதம் குமரவேலை ஆதரித்து முதலமைச்சர் விஜய், சுமார் ஐந்து மணி நேரத்திற்கும் மேலாக ரோடு ஷோ மேற்கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.