📅 Thursday, 08 October 2026 IST | புரட்டாசி 22, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Cinema October 08, 2026 05:04 AM

Sigma Day 5 Box Office

Sigma Day 5 Box Office

சென்னை: விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கியிருக்கும் சிக்மா திரைப்படம் சில நாட்களுக்கு முன்பு தியேட்டர்களில் ரிலீஸானது. படத்தின் மீது எக்கச்சக்க எதிர்பார்ப்பும், நம்பிக்கையும் எழுந்திருந்தது. ஆனால் படம் பெரிதாக ஒர்க் அவுட் ஆகாமல் அடி வாங்கிவிட்டது. இந்நிலையில் அதன் வசூல் குறித்த தரவுகளை Sacnilk இணையதளம் வெளியிட்டிருக்கிறது.

விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகியிருக்கும் திரைப்படம் சிக்மா. இதில் சந்தீப் கிஷன் ஹீரோவாகவும், ஃபரியா அப்துல்லா ஹீரோயினாகவும் நடித்திருக்கிறார்கள். தமன் இசையமைப்பில் லைகா நிறுவனம் தயாரித்திருக்கிறது. விஜய் சினிமாவிலிருந்து ஒதுங்கியிருக்கும் சூழலில்; ஜேசன் சினிமாவுக்குள் வந்திருப்பதால் பெரிய எதிர்பார்ப்பை இந்தப் படத்தின் மீது வைத்திருந்தார்கள். லைகா தரப்பில் படத்தின் ப்ரோமோஷன் பணிகளும் சூப்பராகவே இருந்தன.

ரிலீஸான படம்: ஒருவழியாக கடந்த இரண்டாம் தேதி படமானது ரிலீஸாகிவிட்டது. ஜேசனின் தாய் சங்கீதா, தங்கை திவ்யா சாஷா ஆகியோர் சென்னை கமலா திரையரங்கத்தில் படத்தின் முதல் காட்சியை பார்த்தார்கள். முதலமைச்சர் விஜய் பார்ப்பாரா என்று ரசிகர்கள் ஏங்கினார்கள். ஆனால் அவருக்கு முதலமைச்சராக நிறைய வேலைகள் இருந்ததன் காரணமாக இன்னமும் அவர் படம் பார்க்கவில்லை என்று தெரிகிறது.

எப்படி இருந்தது படம்?: விஜய்யின் ரசிகர்கள் அதிகளவு தியேட்டரில் ரிலீஸ் நாளன்று குவிந்தார்கள். வெளிநாட்டில் இயக்கம் படித்துவிட்டு வந்திருந்த ஜேசன்; தன்னால் முடிந்த அளவுக்கு அதையெல்லாம் தன்னுடைய படத்தில் போட்டிருந்தார்தான். இருப்பினும் இன்னும் கொஞ்சம் அவர் கதை, திரைக்கதையில் கவனம் செலுத்தியிருக்கலாம் என்பது பெரும்பாலானோரின் கருத்தாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

என்ன பிரச்னை?: படத்தின் மேக்கிங்கில் ஜேசன் ஒன்றும் தவறு செய்யவில்லை. ஒரு இயக்குநராக அந்த ஏரியாவில் வென்றுவிட்டார்தான். ஆனால் திரைக்கதையில்தான் ரொம்பவே வீக்காகிவிட்டார். அடுத்தடுத்து என்ன நடக்கும் என்பதை ரசிகர்கள் படம் பார்க்கும்போது முன்கூட்டியே உணர்ந்துவிட்டார்கள். மேலும் ஹீரோயின் மற்றும் வில்லன் செலக்‌ஷனில் அவர் வேறு ஆப்ஷன் சென்றிருக்கலாம் என்றும் குரல்கள் கேட்கின்றன.

வசூல் நிலவரம்: ஆகமொத்தம் சிக்மா படம் எதிர்பார்த்த நிம்மதியை ஜேசனுக்கு கொடுக்கவில்லை என்று எடுத்துக்கொள்ளலாம். இந்நிலையில் அதன் வசூல் குறித்த தகவல்களை Sacnilk இணையதளம் வெளியிட்டிருக்கிறது. அதன்படி ரிலீஸான ஐந்தாவது நாளான நேற்று வெறும் 79 லட்சம் ரூபாயை மட்டும்தான் படம் வசூலித்ததாம். மொத்தம் ஐந்து நாட்களில் அப்படம் ஆறு கோடியே 98 லடச்ம் ரூபாயை வசூலித்திருப்பதாக தெரிகிறது.