ரெப்போ வட்டி விகிதம் 5.5%ஆக உயர்வு; வீட்டு கடன், வாகன கடன் வட்டி அதிகரிக்க வாய்ப்பு
புதுடில்லி: வங்கிகளின் குறுகிய கால கடன்களுக்கான ரெப்போ வட்டி விகிதத்தை 0.25 சதவீதம் ரிசர்வ் வங்கி உயர்த்தி உள்ளது.
வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் கடனுக்கு விதிக்கப்படும் வட்டி விகிதம் ரெப்போ வட்டி விகிதம். இரு மாதங்களுக்கு ஒருமுறை ரிசர்வ் வங்கி அதிகாரிகள் கூடி , ரெப்போ வட்டி விகிதம் குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கும். அதன்படி, ரெப்போ வட்டி விகிதம் குறித்த அறிவிப்பை ரிசர்வ் வங்கி இன்று வெளியிட்டுள்ளது.
ரெப்போ வட்டி விகிதத்தை 0.25 சதவீதம் ரிசர்வ் வங்கி உயர்த்தி உள்ளது. இதனால் ரெப்போ வட்டி விகிதம் 5.5 சதவீதமாக உயர்த்தி ரிசர்வ் வங்கி கவர்னர் சஞ்சய் மல்ஹோத்ரா அறிவித்துள்ளார். இதனால் வீடு, வாகனக் கடன் வட்டி விகிதம் உயர வாய்ப்புள்ளது. கடந்த 3 ஆண்டுகளுக்கு பிறகு ரெப்போ வட்டி விகிதம் உயர்ந்துள்ளது.
நிருபர்களிடம் சஞ்சய் மல்ஹோத்ரா கூறியதாவது: இந்திய பொருளாதாரம் வலுவாக இருக்கிறது. வரும் காலங்களில், உலகளாவிய பொருளாதார நிச்சயமற்ற தன்மை உள்நாட்டுப் பொருளாதார நடவடிக்கைகளில் சில தாக்கங்களை ஏற்படுத்தக்கூடும். ரிசக்தி செலவுகள் மற்றும் உயர்ந்து வரும் உணவுப் பொருட்களின் விலைகளால், உலகளாவிய பணவீக்கம் கடுமையாக அதிகரிக்கும், என்றார்.