Rameswaram Airport : ராமேஸ்வரத்திற்கு விமானத்தில் பறக்கலாம்.! 600 ஏக்கர்... 70 கி.மீ... வெளியானது
Rameswaram Airport : ராமேஸ்வரத்திற்கு விமானத்தில் பறக்கலாம்.! 600 ஏக்கர்... 70 கி.மீ... வெளியானது விமான நிலையத்தின் முக்கிய அப்டேட்
Rameswaram Airport : ராமேஸ்வரம் மக்களின் நீண்ட கால எதிர்பார்ப்பாக இருப்பது விமான நிலையம் தான், தினந்தோறும் பல ஆயிரம் சுற்றுலாப்பயணிகள் ராமேஸ்வரத்தில் குவிந்து வரும் நிலையில், விமான நிலையம் அமைப்பது தொடர்பான முக்கிய அப்டேட் வெளியாகியுள்ளது.
ராமேஸ்வரத்தில் குவியும் சுற்றுலா பயணிகள்
வேகமாக மாறி வரும் காலத்திற்கு ஏற்ப உட்கட்டமைப்பு வசதிகளும் அதிகரிக்கப்பட்டு வருகிறது. மேலும் வெளிநாட்டு முதலீடுகளும் தமிழகத்தை நோக்கி வருவதால் அனைத்து இடங்களுக்கும் உடனடியாக சென்று சேரும் வகையில் புதிய, புதிய விமான நிலையங்கள் உருவாக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், தமிழகத்தில் தற்போது பயணிகள் விமான சேவை நடைபெறும் முக்கிய விமான நிலையங்களாக 6 விமான நிலையங்கள் உள்ளன. சென்னை, கோயம்புத்தூர், திருச்சி, மதுரை, தூத்துக்குடி மற்றும் சேலம் ஆகிய இடங்களில் அமைந்துள்ளன. இதில், சென்னை சர்வதேச விமான நிலையம், கோயம்புத்தூர் சர்வதேச விமான நிலையம், திருச்சிராப்பள்ளி சர்வதேச விமான நிலையம் மற்றும் மதுரை விமான நிலையம் ஆகியவை சர்வதேச விமான சேவைகளாக உள்ளது.
ராமேஸ்வரத்தில் விமான நிலையம்
தூத்துக்குடி மாவட்டம் வாகைக்குளத்தில் தூத்துக்குடி விமான நிலையமும், சேலம் மாவட்டம் காமலாபுரத்தில் சேலம் விமான நிலையமும் அமைந்துள்ளன. இவை தற்போது உள்நாட்டு விமான சேவைகளை மட்டுமே வழங்குகின்றன. இந்த நிலையில், தமிழக அரசு சார்பாக ராமேஸ்வரம், ஓசூரில் புதிய விமான நிலையம் அமைக்க திட்டமிடப்பட்டது. இதற்கான நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டது. அந்த வகையில், ராமேஸ்வரத்தில் விமான நிலையிம் அமைக்க இட அனுமதிக்கு தமிழக அரசு மத்திய அரசிடம் விண்ணப்பிக்க உள்ளது. ராமநாதபுரம் மாவட்டதில் அமைந்துள்ள ராமேஸ்வரம் முக்கிய சுற்றுலா தளமாக உள்ளது.
5 இடங்களை தேர்வு செய்த தமிழக அரசு
தமிழகத்தில் இருந்து மட்டுமில்லாமல் பல மாநிலங்கள், பல நாடுகளில் இருந்தும் ஏராளமாக சுற்றுலா பயணிகள் குவிந்து வருகிறார்கள். குறிப்பாக ராமநாதசுவாமி கோயில், பாம்பன் பாலம், தனுஷ்கோடி, முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாம் நினைவிடம் உள்ளிட்ட சுற்றுலா தளங்கள் உள்ளது. இந்த நிலையில், தற்போது ராமேஸவரத்திற்கு வருவதற்கு ரயில் மற்றும் பேருந்து வசதி மட்டுமே உள்ள நிலையில், வெளிமாநில சுற்றுலா பயணிகள் எளிதாக வந்து செல்லும் வகையில் விமான நிலையம் அமைக்க திட்டமிடப்பட்டது. அந்த வகையில், நிலம் வசதி, விமான நிலையம் அமைக்க பாதுகாப்பான இடம் என ராமநாதபுரத்தில் உள்ள பழங்குளம், தேவிப்பட்டினம், கும்பரம், களரி, மாணிக்கனேரி ஆகிய 5 இடங்கள் கண்டறியப்பட்டன. அதில் அனைத்து வசதிகளும் கொண்ட இடமாக கும்பரம், மாணிக்கனேரி ஆகிய இரண்டு இடங்கள் தேர்வு செய்யப்பட்டது.
மாணிக்கனேரியில் விமான நிலையம்
இந்த இரண்டு இடங்களிலும் இந்திய விமான நிலையங்களில் ஆணைய குழு நேரில் ஆய்வு செய்து இடத்தின் தன்மை, பாதுகாப்பு உள்ளிட்டவைகள் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. இதில் இறுதியாக மாணிக்கனேரி பகுதியில் உள்ள 600 ஏக்கரில் விமான நிலை யம் அமைக்க முடிவெடுக்கப்பட்டது. மாணிக்கனேரி இராமநாதபுரத்திலிருந்து சுமார் 17 கி.மீ தொலைவிலும், ராமேஸ்வரத்தில் இருந்து சுமார் 70 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது.
தலைப்பு செய்திகள்
ஃபோட்டோ கேலரி