📅 Friday, 09 October 2026 IST | புரட்டாசி 23, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Business October 09, 2026 03:03 AM

பருவமழை குறைவால் மளிகை விலை உயர்வு

பருவமழை குறைவால் மளிகை விலை உயர்வு

சென்னை: பரு​வ​மழை குறை​வால் சமையல் எண்​ணெய் உள்ளிட்ட மளி​கைப் பொருட்​களின் விலை உயர்ந்து வரு​கிறது. தற்போது எல் நினோ தாக்​கத்​தால், தென்​னிந்​திய அளவில் செப்.30-ம் தேதி​யுடன் நிறைவடைந்த தென்​மேற்கு பரு​வ​மழை காலத்​தில் வழக்​கத்தை விட 24 சதவீதம் குறைவாக மழை கிடைத்துள்​ளது.

தமிழகம், புதுச்​சேரி​யில் இந்த கால​கட்​டத்​தில் வழக்​க​மாக 32.8 செ.மீ மழை கிடைக்​கும். ஆனால் வழக்​கத்தை விட 20 சதவீதம் குறைந்து 26 செ.மீ மழை மட்​டுமே கிடைத்​துள்​ளது. தமிழகத்​தில் கடந்த ஜூலை மாதமே அரிசி விலை உயர்ந்து இருந்​தது. தற்​போது மேலும் உயர்ந்​துள்​ளது. சமையல் எண்​ணெய், பருப்பு விலை​யும் உயர்ந்​துள்​ளது. இதனால் பொது​மக்​கள் கடும் சிரமத்​துக்​குள்​ளாகி​ உள்​ளனர்.

இது தொடர்​பாக வேலூர் மாவட்​டம், வெட்​டு​வானத்​தில் இயங்​கும் அகர​மாறு உழவர் உற்​பத்​தி​யாளர் நிறுவன தலை​வர் எஸ்.வெங்கடேசன் கூறிய​தாவது: இதற்கு முன்பு நாங்​கள் தமிழகம், ஆந்​தி​ரா, கர்​நாடக பகு​தி​களில் இருந்து வேர்க் ​கடலை கிலோ ரூ.90 முதல் ரூ.105 வரை கொள்​முதல் செய்​தோம். பருவமழை குறைவு காரண​மாக தமிழகத்​தி​லும், அண்டை மாநிலங்​களி​லும் வேர்க்​கடலை கிடைக்​க​வில்​லை.

அதனால் வட மாநிலங்​களில் இருந்து கொண்டு வரு​கிறோம். இப்போது கிலோ ரூ.120 முதல் ரூ.140 வரை உயர்ந்​துள்​ளது. இதனால் நாங்​கள் இது​வரை விற்று வந்த மரச்​செக்கு கடலை எண்ணெய் ஒரு லிட்​டர், ரூ.240-லிருந்து ரூ.260ஆக உயர்த்தி இருக்கிறோம். இதே​போல் நல்​லெண்​ணெய், பருப்பு விலை​யும் உயர்ந்​துள்​ளது. இவ்​வாறு அவர் கூறி​னார்.