Sports
October 09, 2026 08:04 AM
பிரேமானந்த் மகாராஜியின் ஆசிரமத்திடம் ரூ.5 கோடியா ? விராட் கோலி மறுப்பு
புதுடெல்லி,
உத்தரபிரதேச மாநிலம் பிருந்தாவனத்தில் உள்ள பிரேமானந்த் மகாராஜியின் ஆசிரமத்துக்கு இந்திய முன்னணி கிரிக்கெட் வீரர் விராட் கோலி, தனது மனைவியும், நடிகையுமான அனுஷ்கா சர்மாவுடன் கடந்த 2023-ம் ஆண்டு சென்றிருந்தார். அப்போது ஆசிரமத்தை பிரபலப்படுத்தும் வகையில் தனது முதல் வருைகக்காக விராட் கோலி ரூ.5 கோடி பெற்றதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவியது.
இதனை திட்டவட்டமாக மறுத்துள்ள விராட் கோலி தரப்பு, இந்த குற்றச்சாட்டு முற்றிலும் பொய். அடிப்படை ஆதாரமற்றது. ஆன்மிக குரு பிரேமானந்த் மகாராஜ் மீதுள்ள பக்தி மற்றும் ஆழ்ந்த நம்பிக்கை காரணமாகவே அவர் அங்கு சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
Sports