பாலியல் வழக்கு; வீரமணி மீது மேலும் ஒரு பெண் புகார்
சென்னை: போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கிரானைட்ஸ் நிறுவனத்தின் நிறுவனர் வீரமணி மீது சிறப்பு புலனாய்வு குழுவிடம் மேலும் ஒரு பெண் புகார் அளித்துள்ளார்.
சிறுமி அளித்த பாலியல் வன்கொடுமை வழக்கு தொடர்பாக ஆகஸ்ட் 29ம் தேதி கிரானைட் நிறுவன உரிமையாளர் வீரமணி, 84, கைது செய்யப்பட்டார். அவர் மீது இதுவரை நான்கு சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மாடமாளிகையில் குடியிருந்த வீரமணி, பாலியல் வக்கிரத்தால் வீழ்ச்சியடைந்து, சிறையில் சின்னஞ்சிறு அறையில் அடைபட்டுள்ளார். தீவிர பாதுகாப்பு பிரிவில் இருக்கும் அவருக்கு இருக்கும் ஒரே வசதி, படுக்கையும், நாற்காலியும், நாளிதழும்தான் என்கின்றனர், சிறை ஊழியர்கள்.
'மற்ற கைதிகளுடன் அரிதாகவே உரையாடுகிறார். சிறை ஊழியர்களுடன் பேசுவதும் குறைவு. சிறைக்குள் வீரமணி தன்னை வெளிக்காட்டிக் கொள்ளாமல் தனிமையில் தான் நீண்ட நேரம் இருக்கிறார்'' என்பது, சிறை அதிகாரிகளின் கருத்தாக உள்ளது. அங்குள்ள சிசிடிவி கேமரா கண்காணிப்புப் பாதையில் மட்டும் அவர் சற்று நேரம் நடக்க அனுமதிக்கப்படுகிறார். அவரது மகள், வக்கீல்கள் சிலர் மட்டுமே அவரை சந்தித்துள்ளனர். சிறை ஊழியர்கள் யாரும் அவரை தேவையின்றி சந்திக்க அனுமதி கிடையாது. சட்ட விரோத சலுகை காட்டியதாக புகார் எழுந்து விடும் என்பதால், இந்த கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது என்கின்றனர், சிறைத்துறை அதிகாரிகள்.
வீரமணி மீது இதுவரை 5 பேர் புகார்கள் கொடுத்துள்ளனர். அவர் மீது 5 போக்சோ வழக்குகள் பதியப்பட்டு இருக்கின்றன. குண்டர் சட்டமும் பாய்ந்துள்ளது. தற்போது திருவண்ணாமலையை சேர்ந்த பெண் ஒருவர் சிறப்பு புலனாய்வுக் குழுவிடம் புகார் அளித்துள்ளார். இந்த வழக்கை விசாரிக்கத் தமிழக அரசு சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைத்துள்ளது. இதுவரை பாதிக்கப்பட்ட பல சிறுமிகள் மற்றும் சாட்சிகளிடம் இருந்து வாக்குமூலங்கள் பெறப்பட்டு, நீதிமன்றத்தில் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட உள்ளது.
பிரத்யேக வீடியோ!
கிரானைட் வீரமணி மீது மேலும் ஒரு பெண் புகார்; போக்சோ வழக்கில் அடுத்தடுத்து திருப்பம்; தினமலர் வெப்சைட் மற்றும் யூடியூப் சேனலில் நேரலை ஒளிபரப்பு
வீடியோவை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்