ஓய்வூதியத்தில் பிடித்தம் செய்வதா? த.வெ.க., அரசுக்கு கண்டனம் ஜாக்டோ
சென்னை: அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பான ஜாக்டோ - ஜியோ வெளியிட்டுள்ள அறிக்கை:
ஆட்சி பொறுப்பேற்று, நான்கு மாதங்கள் கடந்த நிலையில், உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்திற்கான விதிமுறைகளையும், வழிகாட்டு நெறிமுறைகளையும் வகுக்காமல், அரசு காலம் தாழ்த்தி வருவது ஏற்புடையதல்ல.
இந்நிலையில், 18 ஆண்டுகளுக்கு குறைவாக பணிபுரிந்து, ஓய்வு பெற்றவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் இடைக்கால ஓய்வூதியமான, 30 சதவீதம் வழங்கப்படாது என, அறிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கு பதிலாக, 10 ஆயிரம் ரூபாய் மட்டுமே இடைக்கால மாதாந்திர ஓய்வூதியமாக வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இடைக்கால ஓய்வூதியத்தை பிடித்தம் செய்வதையும், குறைப்பதையும் எள்ளளவும் ஏற்றுக்கொள்ள இயலாது. அதிகார வர்க்கத்தின் செயல் கண்டிக்கத்தக்கது. ஓய்வூதியத்தில் பிடித்தம் செய்வது அதிகார வர்க்கத்தின் ஆணவப் போக்கு. எனவே, முதல்வர் விஜய் இந்த விஷயத்தில் உடனடியாக தலையிட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.