📅 Tuesday, 13 October 2026 IST | புரட்டாசி 27, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Latest News October 13, 2026 05:02 PM

முத்துப்பேட்டை அருகே காவேரி கடைமடை பகுதி பாசனத்திற்கு தண்ணீர் திறக்கக்கோரி விவசாயிகள் சாலை மறியல்!

முத்துப்பேட்டை அருகே காவேரி கடைமடை பகுதி பாசனத்திற்கு தண்ணீர் திறக்கக்கோரி விவசாயிகள் சாலை மறியல்!

முத்துப்பேட்டை அருகே காவேரி கடைமடை பகுதி பாசனத்திற்கு தண்ணீர் திறக்கக்கோரி விவசாயிகள் சாலை மறியல்!

திருவாரூர்: திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அருகே காவேரி கடைமடை பகுதி பாசனத்திற்கு தண்ணீர் திறந்துவிடக் கோரி விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் முத்துப்பேட்டை - பட்டுக்கோட்டை - தஞ்சாவூர் மற்றும் வேளாங்கண்ணி செல்லும் சாலையில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

திருவாரூர் மாவட்டம் முழுவதும் 2,40,000 ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் நேரடி நெல் விதைப்பு மற்றும் நடவுப் பணியில் ஈடுபட்டுள்ளனர். வழக்கமாக மேட்டூர் அணையிலிருந்து ஜூன் 12ஆம் தேதி தண்ணீர் திறக்கப்படும் நிலையில், இந்த ஆண்டு செப்டம்பர் 1ஆம் தேதியே தண்ணீர் திறக்கப்பட்டது. இருப்பினும், அணையிலிருந்து திறக்கப்பட்ட தண்ணீர் 45 நாட்களை கடந்தும் முழுமையாக திருவாரூர் மாவட்டத்திற்கு கடைமடை பகுதிவரை வந்து சேரவில்லை.

குறிப்பாக, முத்துப்பேட்டை அருகே உள்ள இடும்பாவனம், கற்பகநாதர்குளம், தொண்டியக்காடு, விளாங்காடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் நேரடி நெல் விதைப்புப் பணியை மேற்கொண்டிருந்தாலும், முறையாக தண்ணீர் கிடைக்காததால் விவசாயம் செய்ய முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர். பொதுப்பணித்துறை அதிகாரிகளின் அலட்சியத்தால் ஆங்காங்கே முறை வைத்து தண்ணீர் விடப்படுவதாக குற்றம் சாட்டும் விவசாயிகள், முறை வைப்பதை கைவிட்டு, கடைமடை பகுதி வரை தடையின்றி தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி இந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.