📅 Friday, 16 October 2026 IST | புரட்டாசி 30, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Cinema October 16, 2026 01:04 AM

முதலமைச்சர் விஜய்யின் ஆந்திரா பயணத்தில் வெளிப்படைத்தன்மை இல்லை: துரைமுருகன் குற்றச்சாட்டு

முதலமைச்சர் விஜய்யின் ஆந்திரா பயணத்தில் வெளிப்படைத்தன்மை இல்லை: துரைமுருகன் குற்றச்சாட்டு

திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: கிருஷ்ணா நீர் பங்கீடு, கோதாவரி - காவிரி நதிநீர் இணைப்பு குறித்து ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவை முதலமைச்சர் விஜய் சந்தித்தாக தமிழக அரசின் சார்பில் செய்தி குறிப்பு வெளியிட்டிருக்கிறார்கள். முதலமைச்சர் விஜயின் வெளிநாடு மற்றும் வெளிமாநில பயணங்கள் எதுவுமே வெளிப்படைத்தன்மை கொண்டதாக இல்லை. நதிநீர் பற்றி மாநில முதலமைச்சர்கள் பேச்சுவார்த்தை நடத்துகிறார்கள் எனில், இரண்டு முதல்வர்கள் தவிர சுற்றிலும் இரு மாநில நீர்பாசனத் துறை அமைச்சர்களும் உயர் அதிகாரிகளும் அமர்ந்து பேச்சுவார்த்தை நடத்துவார்கள்.

விஷ்ணு ரெட்டிக்கு அங்கே வேலை

ஏன் ஆந்திரா போக வேண்டும்

ஆய்வு கூட்டம் எதுவும் நடக்கவில்லை

கோதாவரி -கிருஷ்ணா-காவிரி நதிநீர் இணைப்பு திட்டம் பற்றி பேசினார்கள் என்றால், அதற்கான வரைவு போடப்பட்டதா? சாத்தியக்கூறு அறிக்கை தயாரிக்க முடிவு எடுத்தார்களா? கோதாவரி - காவிரி நதிநீர் இணைப்புக்காக பிரதமரை இருமாநில முதல்வர்களும் சந்தித்து கோரிக்கை வைப்பது தொடர்பாக இறுதி செய்யப்பட்டதா? இப்படி எந்த தகவலும் இல்லாமல் மொட்டை தாத்தா குட்டையில் விழுந்தது போல தமிழக அரசு செய்திக் குறிப்பு வெளியிட்டிருக்கிறது.

தனிவிமானத்தில்

மரபுகள் மீறப்படுகின்றன

அரசு பணத்தில் செல்கிறவர், அரசின் பணியை மேற்கொண்டதாக சொல்லக் கூடியவர், என்ன பணியை மேற்கொண்டார்? என்பதை மக்களுக்கு விளக்க கூடிய தார்மீக கடமையும் பொறுப்பும் முதல்வருக்கு உண்டு. என்னை யாருமே கேள்வி கேட்க முடியாது என்கிற தான் தோன்றித்தனமாக நடந்து கொள்வது என்பது ஜனநாயகத்தில் ஏற்புடையதாக இல்லை. நினைத்ததை எல்லாம் செய்ய முதலமைச்சர் விஜய் இந்த நாட்டின் மன்னரோ, இளவரசரோ அல்ல. மக்கள் வாக்களித்து தேர்வு செய்யப்பட்ட முதலமைச்சர். வாக்களித்த மக்களுக்கு அனைத்தையும் வெளிப்படுத்த வேண்டும் என்பது தார்மீக கடமை. ஆனால் முதலமைச்சர் விஜய் அரசு முறை பயணங்களை மேற்கொள்ளும் போது பின்பற்றப்படும் மரபுகள் அப்பட்டமாக மீறப்படுகின்றன” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.