📅 Monday, 21 September 2026 IST | புரட்டாசி 5, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Politics September 21, 2026 09:04 AM

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: இன்று முதல் சீமான் பிரசாரம்

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: இன்று முதல் சீமான் பிரசாரம்

மதுராந்தகம், தாராபுரம், புதுச்சேரி தட்டாஞ்சாவடி ஆகிய 3 தொகுதி இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்து களம் காண்கிறது. இந்த தொகுதி களில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று (திங்கட்கிழமை) முதல் பிரசாரத்தை தொடங்குகிறார்.

இதுதொடர்பாக நாம் தமிழர் கட்சியின் தலைமை நிலைய செயலாளர் செந்தில்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், '21, 22, 23, அக்டோபர் 3, 4 ஆகிய 5 நாட்கள் தாராபுரம் தொகுதியிலும், 26, 27, 30, அக்டோபர் 1-ந்தேதி ஆகிய 4 நாட்கள் மதுராந்தகம் தொகுதியிலும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பிரசாரம் மேற்கொள்கிறார்' என்று தெரிவித்துள்ளார். வாகனம் மூலமாகவும், பொதுக்கூட்டம் வாயிலாகவும் அவருடைய பிரசார பயணத்திட்டம் தயார் செய்யப்பட்டுள்ளது.