மருத்துவமனையில் இந்திய விமானியை நேரில் பாராட்டிய துபாய் இளவரசர்
அபுதாபி: ஃப்ளைதுபாய் விமான நிறுவனத்தைச் சேர்ந்த இந்தியாவின் விமானி ஸ்மித் மச்சார், விமானப் பயணத்தின்போது உதவி விமானியால் கொடூரமாகத் தாக்கப்பட்டதால் காயமடைந்து, அபுதாபி நகரில் அமைந்துள்ள மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.
அவரை துபாய் இளவரசரும் ஐக்கிய அரபு சிற்றரசின் துணைப் பிரதமரும் தற்காப்பு அமைச்சருமான ஷேக் ஹம்தான் பின் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் நேரில் சந்தித்து, அவரின் ஒப்பற்ற துணிச்சலான செயல்பாடுகளை நேரில் சந்தித்து வெகுவாகப் பாராட்டினார்.
துபாயிலிருந்து டெல் அவிவ் நகருக்குச் சென்ற ஃப்ளைதுபாய் விமானத்தின் கட்டுப்பாட்டு அறைக்குள், ஓமான் நாட்டைச் சேர்ந்த உதவி விமானி ஹமாம் அல்ஹம்மாமி நுழைந்து, அவசரகாலத் தேவைகளுக்காகவும் பாதுகாப்பிற்காகவும் பயன்படுத்தப்படும் கோடரியால் கேப்டன் ஸ்மித் மச்சாரைத் தாக்கினார்.
அந்த ஆபத்தான சம்பவத்தின்போது விமானம் மிக வேகமாக கீழ்நோக்கி இறங்கி, தனது பறக்கும் உயரத்தை அதிவேகமாக இழந்து பெரும் ஆபத்தான நிலைக்குத் தள்ளப்பட்டது.
கடும் காயங்கள் அடைந்தபோதிலும், கேப்டன் மச்சார் மிகுந்த மன உறுதியுடன் செயல்பட்டு விமானி அறையின் கதவைத் திறந்ததுடன், விமானப் பணியாளர்களுக்கும் பயணிகளுக்கும் உடனடியாக விழிப்புணர்வு எச்சரிக்கை விடுத்தார்.
இதனால் அவர்கள் விரைந்து வந்து தலையிட்டு, தாக்குதல் நடத்திய உதவி விமானியைத் தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து உடனடியாக மடக்கிப் பிடித்தனர்.
விமானி மச்சாரின் இந்தத் துணிச்சலான சமயோசிதச் செயலால், விமானத்தில் பயணம் செய்த 170க்கும் மேற்பட்ட பயணிகளும் விமானப் பணியாளர்களும் பெரும் ஆபத்திலிருந்து காப்பாற்றப்பட்டனர்.
இந்த மருத்துவமனைச் சந்திப்பிற்குப் பிறகு சமூக ஊடகமான எக்ஸ் தளத்தில் பதிவிட்ட துபாய் இளவரசர் ஷேக் ஹம்தான், “எங்களது நாட்டின் தலைமையின் சார்பில் அவருக்கு எங்களது முழுமையான பாராட்டும் மரியாதையும் உரித்தாகிறது,” என்று நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.
இவையும் உங்களுக்குப் பிடிக்கலாம்
மேலும், மச்சார் தங்களது குழுவின் ஒரு முக்கியப் பகுதி என்றும் ஐக்கிய அரபு சிற்றரசு இரக்கம், அமைதி, நல்வாழ்விற்கான நாடு என்பதை உலகிற்கு உணர்த்தும் சிறந்த அடையாளம் என்றும் அவர் புகழாரம் சூட்டியுள்ளார்.
ஆபத்தான சூழலில் சாதுரியமாகச் செயல்பட்டுப் பல உயிர்களைக் காப்பாற்றிய இந்திய விமானியை துபாய் இளவரசர் நேரில் சென்று பாராட்டிய நிகழ்வு உலகளவில் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது.