மெக்கா நகரம் மீது டிரோன் தாக்குதல்: இந்தியா கண்டனம்
புதுடில்லி:சவுதி அரேபியாவின் மெக்கா நகரை நோக்கி டிரோன் வாயிலாக ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தியதற்கு இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது.
மெக்கா நகரின் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ட்ரோன் மூலம் தாக்குதல் நடத்த முயன்றனர். எனினும், மெக்கா வான் எல்லைக்குள் நுழைவதற்குள் அந்த ட்ரோனை சவுதி அரேபிய வான் பாதுகாப்புப் படையினர் இடைமறித்து சுட்டு வீழ்த்தி தாக்குதல் முயற்சியை வெற்றிகரமாக முறியடித்தனர்.
மெக்கா அருகே டிரோன் வாயிலாக தாக்குதல் நடத்தப்பட்டது ஆழ்ந்த கவலை அளிக்கிறது. சவுதி அரேபியாவில் இறையாண்மை மிக்க பகுதிகளில் தாக்குதல் நடத்துவதும், அப்பாவி மக்கள் மற்றும் உள்கட்டமைப்புகள் மீது தாக்குதல் நடத்தப்படுவதற்கு இந்தியா தனது கண்டனத்தை மீண்டும் உறுதி செய்கிறது.
உலகம் முழுவதும் உள்ள முஸ்லிம்களுக்கு மிகவும் சிறப்பு வாய்ந்த இடமான மெக்கா அருகே நடத்தப்பட்ட தாக்குதல் கவலை அளிக்கிறது. இந்த பிராந்தியத்தில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மை விரைவில் திரும்பும் என நம்புகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.