📅 Saturday, 19 September 2026 IST | புரட்டாசி 3, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Politics September 19, 2026 09:33 AM

மேற்கு வங்க இடைத்தேர்தல்: மம்தா, அதிருப்தி அணிக்கு தனி பெயர், சின்னம்

மேற்கு வங்க இடைத்தேர்தல்: மம்தா, அதிருப்தி அணிக்கு தனி பெயர், சின்னம்

கொல்கத்தா: நந்​தி​கி​ராம், ரெஜினகர் சட்​டப் பேரவை தொகுதிகளுக்கு வரும் அக்​.6-ம் தேதி இடைத்​தேர்​தல் நடைபெறுகிறது. இந்த தேர்​தலில் மம்தா பானர்ஜி தலைமையிலான அணி​யும், அரூப் ராய் தலை​மையி​லான அணியும் திரிணமூல் காங்கிரஸ் கட்​சி​யின் பெயர் மற்​றும் அக்​கட்​சி​யின் புல்​வெளி​யில் இரட்டை மலர்​கள் சின்​னத்​துக்கு உரிமை கோரின.

இதுதொடர்​பாக, தேர்​தல் ஆணை​யத்​திடம் இரு அணி​களும் முறை​யிட்ட நிலை​யில், இரு அணி​களுக்​கும் இடைத்​தேர்​தலில் தனித்​தனி பெயர் மற்​றும் தனித்​தனி சின்​னங்​களு​டன் போட்டியிட தேர்​தல் ஆணை​யம் அனு​ம​தித்​துள்​ளது.

இதன்​படி, மம்தா பானர்ஜி தலை​மையி​லான அணிக்கு “மம்தா ஆல் இந்​தியா திரிண​மூல் காங்​கிரஸ்” என்ற பெயரும், “கால்​பந்து வீரர்” சின்​ன​மும் ஒதுக்​கப்​பட்​டுள்​ளன. அரூப் ராய் தலை​மையி​லான அணிக்கு “டெ​மாக்​ரடிக் திரிண​மூல் காங்​கிரஸ்” என்ற பெயரும், “அஞ்சல் உறை” சின்​ன​மும் ஒதுக்​கப்​பட்​டுள்​ளன.

ராகுல் ​காந்தி கண்​டனம்

திரிண​மூல் காங்​கிரஸ் கட்​சி​யின் பெயர், சின்​னத்தை தேர்​தல் ஆணை​யம் முடக்​கி​யிருப்​பதை மக்​களவை எதிர்க்​கட்​சித் தலைவர் ராகுல் காந்தி கடுமை​யாக விமர்​சித்​து உள்​ளார்.

நந்திகிராமில் திரிணமூல் வேட்பாளர் திடீர் விலகல்

மேற்​கு​வங்கத்​தில் கடந்த மே மாதம் நடை​பெற்ற சட்​டப்​பேரவை தேர்​தலில், பாஜகவை சேர்ந்த முதல்​வர் சுவேந்து அதி​காரி 2 தொகு​தி​களில் போட்​டி​யிட்டு வெற்றி பெற்​றார். பின்​னர், அவர் நந்​தி​கி​ராம் தொகுதி எம்​எல்ஏ பதவியை ராஜி​னாமா செய்​தார்.

இதைத்தொடர்ந்து, நந்​தி​கி​ராம் தொகு​திக்​கான இடைத்​தேர்​தல் வரும் அக்​.6-ம் தேதி நடை​பெறுகிறது. நந்​தி​கி​ராம் இடைத்​தேர்​தலில் மம்தா அணி​யின் சார்​பில், சஞ்​சிதா பிர​தான் தேய் வேட்​பாள​ராக கடந்த ஞாயிறன்று அறிவிக்​கப்​பட்​டார். அவர் திடீரென தேர்தலில் இருந்து வில​கு​வ​தாக அறிவித்தார்.

இதையடுத்து, காங்​கிரஸ் வேட்​பாள​ருக்கு ஆதரவு அளிப்​ப​தாக மம்தா பானர்ஜி அறி​வித்​துள்​ளார்.காங்கிரஸ் கட்சிக்கு மம்தா பானர்ஜி ஆதரவு தெரிவித்த சில மணி நேரங்களிலேயே, அக்கட்சியின் வேட்பாளர் மிலன் பிரதான் பழைய கொலை வழக்கு தொடர்பாக காவல்துறையினரால் நேற்று கைது செய்யப்பட்டார். அவர் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என்று காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.