📅 Saturday, 10 October 2026 IST | புரட்டாசி 24, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Latest News October 10, 2026 10:01 AM

மாற்றுக் களம் | சிற்றிதழ்

மாற்றுக் களம் | சிற்றிதழ்

காக்​கைச் சிறகினிலே அக்​டோபர் 2026 இதழ் வெளி​யாகி​யிருக்​கிறது. தீவிர​மான அரசி​யல் கட்​டுரைகளு​டன் நடப்​புச் சூழலோடு தொடர்​புடைய ஆய்​வுக் கட்​டுரைகளும் இவ்​விதழில் இடம்​பெற்​றுள்​ளன.

வீர​மா​முனிவர் தொகுத்த தமிழ் - பிரெஞ்சு அகரா​திச் சுவடி​யில் அவர் எழு​திய முக​வுரையை முன்​வைத்​திருக்​கிறார் பேராசிரியர் எஸ்​.ஜெயசீல ஸ்டீபன். கல்வி உரிமைச் சட்​டம் (2010) நடை​முறைப்​படுத்​தப்​பட்டு 16 ஆண்​டு​களான நிலை​யிலும், இந்​தி​யா​வின் கல்வி நிலை எவ்​வளவு பின்​னடைவைச் சந்​தித்​துள்​ளது என்​பதை விவரித்​திருக்​கிறார் எழுத்​தாளர் நிகழ் அய்க்​கண். தேர்​தல் ஆணை​யத்​தின் எஸ்​.ஐ.ஆர் நடிவடிக்​கை​யால் வாக்​குரிமையை இழந்​தவர்​களின் பின்​னணியை கர்​நாடக மாநிலத்​தின் தரவு​களைக் கொண்டு ஆராய்ந்​திருக்​கிறார் ஷிவசுந்​தர்.

மார்க்​சிய அறிஞர் டேவிட் ஹார்​வே​யின் கோட்​பாட்டை விரி​வாக எடுத்​துரைத்​துள்​ளார் பேராசிரியர் இரா.முரளி. இலங்​கை​யின் காலனிய வரலாற்​றில் அதி​கம் அறியப்​ப​டாத ஸ்பெ​யினின் ஆதிக்​கம் பற்றி விவரித்​துள்​ளார் எழுத்​தாளர் என்​.சர​வணன். இது​போன்ற தீவிர விவாதங்​களை முன்​வைக்​கும் கட்​டுரைகளோடு ச.மருதுதுரை​யின் சிறுகதை​யும், சி.​நா​ராயண ரெட்​டி​யின்​ கவிதை​யும்​ இவ்​விதழில்​ இடம்​பெற்​றுள்​ளன.

​காக்​கைச் சிறகினிலே

ஆசிரியர்: வி.​முத்​தையா

தொடர்​புக்​கு: 98414 57503