📅 Friday, 25 September 2026 IST | புரட்டாசி 9, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Tamil Nadu September 25, 2026 08:04 PM

மானத்தைப் பற்றி கவலைப்படாத ஒருவரிடம் தமிழ்நாடு சிக்கியுள்ளது முதல்வர் விஜயை கடுமையாக விமர்சித்த மேயர் பிரியா

மானத்தைப் பற்றி கவலைப்படாத ஒருவரிடம் தமிழ்நாடு சிக்கியுள்ளது முதல்வர் விஜயை கடுமையாக விமர்சித்த மேயர் பிரியா

மானத்தைப் பற்றி கவலைப்படாத ஒருவரிடம் தமிழ்நாடு சிக்கியுள்ளது முதல்வர் விஜயை கடுமையாக விமர்சித்த மேயர் பிரியா

சென்னை: சென்னை மாநகராட்சி மாமன்றக் கூட்டம் தொடங்கியதும் மேயர் பிரியா உரையாற்றினார். அப்போது, தனியார் நிகழ்ச்சியில் நடிகர் விஜய் சேதுபதி பேசிய தலைமைத்துவம் தொடர்பான கருத்துகளை சுட்டிக்காட்டி, தமிழ்நாடு முதலமைச்சர் விஜயை கடுமையாக விமர்சித்தார்.பெரியாரின் கருத்தை மேற்கோள் காட்டி, ‘‘மானத்தைப் பற்றி கவலைப்படாத ஒருவரிடம் தமிழ்நாடு மாட்டிக்கொண்டு உள்ளது’’ என்று கூறி தனது உரையை மேயர் பிரியா தொடங்கினார்.தொடர்ந்து அவர் பேசுகையில், பல வரலாற்றுச் சிறப்புமிக்க தலைவர்களை முதலமைச்சர்களாக கொண்டது தமிழ்நாடு சட்டமன்றம். பக்தவச்சலம் தொடங்கி முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரை பல்வேறு தலைவர்கள் அந்தப் பதவியில் இருந்துள்ளனர். ஆனால், உடல்மொழியாலும், செய்கைகளாலும், தரம் தாழ்ந்த செயல்களாலும் தமிழ்நாடு சட்டமன்றத்தின் மாண்பு இழந்து நிற்கிறது. தற்போதைய அரசுக்கு ஆதரவு தெரிவிக்கும் இடதுசாரி கட்சிகளும், முன்னணி பத்திரிகையாளர்களும் சில செயல்களுக்கு கண்டனங்களை தெரிவித்துள்ளனர்.

முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை கண்ணியக்குறைவாக செய்த, முதலமைச்சர் விஜய்க்கு தனது கண்டனத்தையும் பதிவு செய்கிறேன். எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் முன்வைக்கும் கேள்விகளுக்கு முதலமைச்சர் விஜயால் பதில் அளிக்க முடியவில்லை. சட்டமன்றத்தில் தனது வாதத் திறமையால் ஆளுங்கட்சியை திணற வைக்கும் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினுக்கு பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.தமிழ்நாட்டில் தவெக அரசு பொறுப்பேற்று 4 மாதங்களில் ஏராளமான பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளதாகவும், குற்றச் சம்பவங்கள், கொலைகள், பாலியல் குற்றச்சாட்டுகள், சட்டம்-ஒழுங்கு பிரச்சினைகள் உள்ளிட்ட பல்வேறு சம்பவங்கள் நிகழ்ந்து வருகிறது. இதனால் ஏழை, எளிய மக்கள் பெரிதும் பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.

மின் கட்டண உயர்வால் வீடுகள், மருத்துவமனைகள், தொழிற்சாலைகள் பாதிக்கப்படுவதாகவும், மின்சாரம் இல்லாத காரணத்தால் தமிழ்நாடு மக்கள் தவித்து வருகிறார்கள். மின்தடை காரணமாக மாணவ-மாணவிகள் மெழுகுவர்த்தி ஏந்தி படிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மக்கள் மின்தடை குறித்து காரணம் கேட்டால், ‘‘மழை பெய்யவில்லை, காற்று அடிக்கவில்லை’’ என்று அமைச்சர் பதில் அளித்துள்ளார். இதுபோன்ற நிலை நிர்வாகச் சீர்கேட்டை காட்டுகிறது. நகரின் வளர்ச்சிக்கு மைல்கல்லாக அமையக்கூடிய பரந்தூர் விமான நிலையத் திட்டத்தை கைவிடுவது, இருப்பதை கைவிட்டு பறப்பதற்கு ஆசைப்படுவது போன்றது. மேலும், மீனம்பாக்கம் விமான நிலையத்தை தனியாருக்கு தாரை வார்ப்பது உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளில் தவெக அரசு ஈடுபட்டு வருகிறது.

தலைவர் என்றால் என்ன என்பது தெரியாமல், கொள்கையை உணராமல், பிரச்சினைகள் வரும்போது எதிராளி மீது பழியைப் போடுவது தலைமைப் பண்பு கிடையாது, அது ஏமாற்று வேலை. தனியார் நிகழ்ச்சியில் விஜய் சேதுபதி தலைமைத்துவம் குறித்து பேசிய கருத்துகள், முதலமைச்சர் விஜயை விமர்சிப்பதாக சமூக வலைதளங்களில் விவாதம் எழுந்தது. ஆனால், பின்னர் விஜய் சேதுபதி அந்தப் பேச்சு நிகழ்ச்சியில் தமக்கும் போட்டியாளர்களுக்கும் இடையிலான உரையாடல் என்றும், வெளியில் உள்ள யாரையும் குறிப்பிடவில்லை என்றும் விளக்கம் அளித்திருந்தார்.ஆளுங்கட்சியாக இருந்தாலும், எதிர்க்கட்சியாக இருந்தாலும் திராவிட முன்னேற்றக் கழகத்தில் திமுக தலைவரின் நடவடிக்கைகளால் தமிழ்நாடு முன்னிலை மாநிலமாக உருவாகி வருகிறது. இவ்வாறு அவர் பேசினார். மேயர் பிரியாவின் உரை சென்னை மாநகராட்சி மாமன்றக் கூட்டத்தில் அரசியல் ரீதியாக பரபரப்பை ஏற்படுத்தியது.