📅 Monday, 14 September 2026 IST | ஆவணி 29, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Cinema September 01, 2026 02:01 PM

லண்டனில் திரிஷா.. செம கேஷுவலா இருக்காங்களே பாஸ்.. சூப்பர் வீடியோ

லண்டனில் திரிஷா.. செம கேஷுவலா இருக்காங்களே பாஸ்.. சூப்பர் வீடியோ

சென்னை: தமிழ் சினிமாவின் டாப் நடிகைகளில் ஒருவராக இன்னமும் மின்னிவருகிறார் திரிஷா. இந்த வருடத்தில் அவர் நடிப்பில் வெளியான கருப்பு திரைப்படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆனது. அப்படத்தில் ப்ரீத்தி என்ற கேரக்டரை ஏற்றிருந்தார். மொத்தம் அப்படம் இதுவரை 200 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்திருக்கிறது. இந்நிலையில் அவர் குறித்து புதிய தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது.

ஜோடி படத்தில் சிம்ரனுக்கு தோழிகளாக நடித்தவர்களில் ஒருவர் திரிஷா. அதனையடுத்து லேசா லேசா, மௌனம் பேசியதே ஆகிய படங்களில் ஹீரோயினாக அறிமுகமான அவர்; சில படங்களிலேயே டாப் நடிகைகளில் ஒருவராக மாறினார். ரஜினிகாந்த், கமல்ஹாசன், அஜித், விஜய், சூர்யா, விக்ரம், சிம்பு, தனுஷ், விஜய் சேதுபதி, ரவி மோகன், ஆர்யா என பல ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்திருக்கிறார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, ஹிந்தி மொழிகளிலும் மேடத்துக்கு சரியான மார்க்கெட் இருந்தது.

கம்பேக் தந்த திரிஷா: தொடர்ச்சியாக ஹிட் படங்களில் நடித்த அவருக்கு இடையில் திடீரென தோல்விகளாக வந்தன. உடனே சுதாரித்த அவர் ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளை தேர்ந்தெடுத்து நடித்தார். அந்தவகையில் அவர் நடித்த 96, பொன்னியின் செல்வன் படங்கள் எல்லாம் சூப்பரான ரெஸ்பான்ஸை கொடுக்க; அம்மணிக்கு அந்தப் படங்களே கம்பேக் படங்களாக அமைந்துவிட்டன. நயனுக்கும் திருமணத்துக்கு பிறகு மார்க்கெட் கொஞ்சம் டல்லடித்தது. அந்த கேப்பை சரியாக பயன்படுத்தினார் திரிஷா.

எல்லாம் பெரிய படங்கள்தான்: கடந்த வருடத்தில் மட்டும் அவர் மூன்று பெரிய படங்களில் நடித்தார். இந்த வருடத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக கருப்பு படத்தில் நடித்தார். ஆர்.ஜே.பாலாஜி இயக்கியிருந்த அந்தப் படத்தில் திரிஷா ப்ரீத்தி என்ற வக்கீல் கேரக்டரை ஏற்று நடித்திருந்தார். படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆகியிருக்கிறது. உலகளவில் மொத்தம் 200 கோடி ரூபாய்க்கும் மேல் படம் வசூலை அள்ளியிருக்கிறது. இதனால் திரிஷா சூப்பர் ஹேப்பியாக இருக்கிறார்.

சர்ச்சைகள்: இதற்கிடையே விஜய் - சங்கீதா விவகாரத்தில் திரிஷாவின் பெயர் அளவுக்கு அதிகமாகவே டேமேஜ் ஆனது. அவர் அதுகுறித்து எதுவும் பேசாமல் சைலெண்ட்டாக இருந்தாலும்; அவ்வப்போது விஜய் தொடர்புடைய நிகழ்ச்சிகளுக்கு அவரது வருகைதான் சர்ச்சையை கிளப்பிவருகிறது. விஜய் ரசிகர்களும், தொண்டர்களும் இந்த விஷயத்தில் திரிஷாவுக்கு எதிர் நிலையில் இருக்கிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

லண்டனில் திரிஷா: சிலர் திரிஷா பகிரும் இன்ஸ்டாகிராம் போஸ்ட்டின் கமெண்ட்ஸில் கூட விஜய்யிடமிருந்து கொஞ்சம் தூரமாக இருங்களேன் என ஓபனாகவே சொல்கிறார்கள். அவர் அதையெல்லாம் பெரிதாக கண்டுகொள்வதில்லை. இந்நிலையில் திரிஷாவின் வீடியோ ஒன்று சோஷியல் மீடியாவில் ட்ரெண்டாகியுள்ளது. அதாவது அவர் இப்போது லண்டனுக்கு சென்றிருக்கிறார். அங்கு ஒரு ரெஸ்டாரன்ட்டில் தனது தோழிகள் புடை சூழ கேஷுவலாக அமர்ந்து பேசிக்கொண்டிருக்கிறார். அதனை லண்டன் வாழ் ரசிகை ஒருவர் வீடியோவாக எடுத்து பகிர்ந்திருக்கிறார்.