📅 Saturday, 17 October 2026 IST | புரட்டாசி 31, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Malaysia Tamil October 15, 2026 08:04 PM

‘லெட்ஜர்’ மின்னிலக்க நாணய வன்பொருள் பணப்பை சாதனத்தின் விற்பனை நிறுத்தம்

‘லெட்ஜர்’ மின்னிலக்க நாணய வன்பொருள் பணப்பை சாதனத்தின் விற்பனை நிறுத்தம்

வாடிக்கையாளர்களின் பணத்தைத் திருடும் வகையில் தமது சாதனம் மாற்றியமைக்கப்பட்டதைப் பாரிசைச் சேர்ந்த மின்னிலக்க நாணய வன்பொருள் பணப்பை தயாரிப்பு நிறுவனமான ‘லெட்ஜர்’ கண்டறிந்தது.

அதனையடுத்து, தென்கிழக்காசிய நாடுகள் முழுவதும் தமது சாதனத்தின் விற்பனையை அந்நிறுவனம் தற்காலிகமாக நிறுத்தியது.

கடந்த அக்டோபர் 9ஆம் தேதி தங்களின் மின்னிலக்க நாணயம் (கிரிப்டோ கரன்சி) திருடப்பட்டதாக அதன் பயனர்கள் புகாரளித்தனர்.

அதனைத் தொடர்ந்து, வட்டார மறுவிற்பனையாளர்களும் விநியோகிப்பாளர்களும் வன்பொருள் பணப்பை சாதனங்களைத் தங்களின் விற்பனை அடுக்குகளிலிருந்து அகற்றுமாறு ‘லெட்ஜர்’ நிறுவனம் கேட்டுக்கொண்டுள்ளது.

மலேசிய மறுவிற்பனையாளரான ‘கிரிப்டோபிலிஸ்’ விற்ற கருவிகளில் தீங்கிழைக்கும் மென்பொருள் பாகங்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இது குறித்து லெட்ஜர் நிறுவனம் தற்போது தீவிர விசாரணை நடத்தி வருகிறது.

பயனர்கள் 24 வார்த்தைகள் கொண்ட மீட்டெடுப்புத் தொடரைத் தட்டச்சு செய்யும்போது, அந்தத் தகவல்கள் மூன்றாம் தரப்பினருக்கு உடனடியாக அனுப்பப்படுகின்றன.

பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, இழப்புத் தொகை ஆகியவற்றை அந்நிறுவனம் இன்னும் அதிகாரபூர்வமாக உறுதிப்படுத்தவில்லை.

இவையும் உங்களுக்குப் பிடிக்கலாம்

இருப்பினும், இழப்பு $110.294 மில்லியனுக்கும் (86 மில்லியன் அமெரிக்க டாலர்) அதிகம் எனப் பகுப்பாய்வாளர்கள் மதிப்பிட்டுள்ளனர். இந்த இழப்புகள் தென்கிழக்காசியாவில் மட்டுமே ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

தற்போது சிங்கப்பூர், மலேசியா, இந்தோனீசியா, தாய்லாந்து, பிலிப்பீன்ஸ், வியட்னாம், ஹாங்காங் ஆகிய இடங்களில் இந்த விற்பனை நிறுத்தம் அமலில் உள்ளது.