📅 Tuesday, 22 September 2026 IST | புரட்டாசி 6, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Cinema September 22, 2026 01:01 PM

கர்ணனாக ராகவா லாரன்ஸ்..மஹாவீர் கர்ணா ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மெர்சல் செய்யுதே

கர்ணனாக ராகவா லாரன்ஸ்..மஹாவீர் கர்ணா ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மெர்சல் செய்யுதே

சென்னை: தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் பிரபலமான நடன அமைப்பாளர்களில் ஒருவர் ராகவா லாரன்ஸ். பிறகு ஹீரோவாக மாறி சில ஹிட் படங்களை கொடுத்தார். கடந்த பல வருடங்களாகவே அவர் பலருக்கும் பல உதவிகளை செய்துவருகிறார். இந்நிலையில் அவரது புதிய படம் தொடர்பான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியிருக்கிறது.

நடன அமைப்பாளரான ராகவா லாரன்ஸ்; அற்புதம் திரைப்படத்தில் ஹீரோவாக அறிமுகமானார். அதனையடுத்து முனி திரைப்படத்தில் நடித்து ஹிட் ஹீரோவாக மாறினார். தொடர்ந்து அவர் இயக்கி நடித்த காஞ்சனா பட சீரிஸ் பட்டித்தொட்டியெங்கும் ஹிட்டடித்தது. பாலிவுட்டிலும் ரீமேக் ஆனது. இதனால் பிஸியான ஹீரோவாக மாறினார். அடுத்தடுத்து நடிப்பதற்கும் அவர் கைவசம் எக்கச்சக்க படங்கள் இருக்கின்றன.

உதவி செய்யும் லாரன்ஸ்: இது ஒருபக்கம் இருக்க யாரும் இல்லாத குழந்தைகளை தத்து எடுத்து வளர்ப்பது, ஏழை மக்களுக்கு தன்னால் முடிந்த உதவிகளை செய்வது என லாரன்ஸ் இந்த சமூகத்தில் முக்கிய பங்காற்றிவருகிறார். அவர் வளர்த்த குழந்தைகள் எல்லாம் இன்று நல்ல நிலையில் இருக்கிறார்கள். அதுவே அவருக்கு பலரிடம் பெரிய பாராட்டை பெற்றுக்கொடுத்திருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

லாரன்ஸின் வீடியோ: சூழல் இப்படி இருக்க ராகவா லாரன்ஸ் தவெகவில் இணைந்து திருச்சி கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் களம் காணவிருக்கிறார் என்றெல்லாம் தகவல்கள் வந்தன. சமீபத்தில் அவர் ஒரு வீடியோ வெளியிட்டார். அந்த வீடியோவில், "திருச்சி கிழக்கு தொகுதியில் நான் நிற்க வேண்டுமென்றால் அரசியலுக்கு வர வேண்டும். நான் சமூக சேவைகள் செய்துவருகிறேன். கஷ்டப்படுபவர்களுக்கு உதவுகிறேன் என்று பேசினார்.

ரஜினி பற்றி: மேலும் பேசிய அவர் " விஜய் அரசியலுக்கு வந்தபோது அம்மாவிடம் சென்று, 'நண்பர் வருகிறார்' என கூறினேன்.விஜய் கடின உழைப்பாளி. அம்மாவிடம் மீண்டும் கேட்டேன். அவர் மீண்டும் வேண்டாம் என்றுதான் சொன்னார். விஜய்யிடமும் சொல்கிறேன் என கூறினார். தேர்தல் முடிவுகள் வந்ததும், அம்மாவிடம் பேசினேன். அதற்கு அவர், விஜய் அனைத்தையும் மாற்றிவிட்டார் என கூறி; அரசியலுக்கு வர அனுமதி கொடுத்தார். அம்மா ஓகே சொல்லிவிட்டார். ரசிகர்களாகிய நீங்கள் என்ன சொல்கிறீர்கள் என கமெண்ட்ஸ் செய்யுங்கள்" என கேட்டிருந்தார்.

யார் பக்கம் செல்வார்?: அவர் அப்படி வீடியோ வெளியிட்டதை வைத்தே அவர் அரசியலுக்கு வருவது உறுதியாகியிருக்கிறது. அவர் வரும்போது தவெகவில் இணைவாரா இல்லை அண்ணாமலையோடு செல்வாரா; இல்லை தனியாக செயல்படுவாரா என்ற கேள்விகளும் எழுந்திருக்கின்றன. மேலும், தவெக சார்பில் திருச்சி கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அவர்தான் களமிறங்குவார் என்றும் ஒரு தகவல் தொடர்ந்து ஓடுவதும் கவனிக்கத்தக்கது. ஆனால் அவர் அதில் பெரிய ஈடுபாடு காட்டவில்லை என்றே தெரிகிறது. அந்த வீடியோவுக்கு பிறகு பெரிய அளவில் எதுவும் அரசியலில் அவரிடமிருந்து மூவ்மென்ட் தெரியவில்லை.

புதிய படம்: இந்நிலையில் ராகவா லாரன்ஸ் நடிக்கும் புதிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியிருக்கிறது. படத்துக்கு மஹாவீர் கர்ணா என்ற பெயர் வைக்கப்பட்டுள்ளது. ரவி வர்மா இயக்கியிருக்கிறர். லாரன்ஸ் மன்னர் கெட்டப்பில் கலக்குகிறார். கண்டிப்பாக இப்படம் பெரிய வெற்றி பெறும் என்ற நம்பிக்கையில் இருக்கிறார்கள் அவரது ரசிகர்கள்.