📅 Tuesday, 08 September 2026 IST | ஆவணி 23, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Cinema September 05, 2026 10:01 AM

கல்யாணம் முடிஞ்ச கையோட ஹனிமூன் பறந்த வினுஷா தேவி.. குவியும் வாழ்த்து!

கல்யாணம் முடிஞ்ச கையோட ஹனிமூன் பறந்த வினுஷா தேவி.. குவியும் வாழ்த்து!

சென்னை: சின்னத்திரை உலகில் தனக்கு என தனி ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கி வைத்துள்ள நடிகை வினுஷா தேவி, கடந்த வாரம் தனது காதலரை திருமணம் செய்து கொண்ட நிலையில், தற்போது கணவருடன் ஹனிமூன் சென்றுள்ளார்.

விஜய் தொலைக்காட்சியின் ஆல்-டைம் பிளாக்பஸ்டர் சீரியல்களில் ஒன்றான 'பாரதி கண்ணம்மா' மூலம் பட்டிதொட்டி எங்கும் பிரபலமடைந்தவர் வினுஷா தேவி. ஆரம்பத்தில் பல தடைகளையும், நெட்டிசன்களின் கடுமையான கேலிகளையும் தாண்டி வந்து, இன்றைக்கு தமிழ் சின்னத்திரையின் முன்னணி நாயகியாக உருவெடுத்துள்ளார்.

ஆரம்பகால நெகட்டிவிட்டி: 'பாரதி கண்ணம்மா' தொடரில் முதலில் கண்ணம்மா கதாபாத்திரத்தில் நடித்து வந்த ரோஷினி ஹரிப்ரியன், திடீரென சீரியலை விட்டு விலகியபோது, விஜய் டிவி நிர்வாகம் அந்த பொறுப்பை வினுஷா தேவியிடம் ஒப்படைத்தது. வினுஷா என்ட்ரி கொடுத்த புதிதில், ரசிகர்கள் பலரும் ரோஷினி அளவுக்கு இவங்க செட் ஆகல, கண்ணம்மா கேரக்டருக்கு இவங்க செட் ஆகமாட்டாங்க என சோஷியல் மீடியாவில் கடுமையாக ஒப்பிட்டு பேசி நெகட்டிவ் கமெண்ட்களை பரப்பினர்.

யதார்த்த நடிப்பு: ஆனால், எந்த விமர்சனத்தையும் பொருட்படுத்தாத வினுஷா, தனது தனித்துவமான மற்றும் யதார்த்தமான நடிப்பால் குறுகிய காலத்திலேயே மக்களின் மனதை வென்றார். ஒரு கட்டத்தில் ரசிகர்கள் ரோஷினியையே மறந்து, இவங்கதான்ப்பா உண்மையான கண்ணம்மா என்று சொல்லும் அளவிற்கு அந்த கதாபாத்திரமாகவே வாழ்ந்து காட்டி மாஸ் காட்டினார்.

பிக் பாஸ் பயணம்: சீரியலின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து, பிக் பாஸ் வீட்டிற்குள் போட்டியாளராக நுழைந்தார் வினுஷா. பிக் பாஸ் வீட்டிற்குள் மிகவும் நேர்மையாகவும், அமைதியாகவும் விளையாடிய போதிலும், எதிர்பாராதவிதமாக 28 நாட்களிலேயே அவர் வீட்டை விட்டு வெளியேற வேண்டியதாயிற்று. இருப்பினும், அவருக்கு கிடைத்த மக்கள் ஆதரவு குறையவில்லை. தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் 'சுட்டுவிழி சுடரே' என்ற புதிய தொடரில் முதன்மை கதாநாயகியாக நடித்து வருகிறார்.

காதல் திருமணம்: தனது தனிப்பட்ட வாழ்க்கையில் பல வருடங்களாக காதலித்து வந்த லிங்கேஸ்வரன் என்பவரை, கடந்த வாரம் இருவீட்டார் சம்மதத்துடன் மிகக்கோலாகலமாகத் திருமணம் செய்து கொண்டார் வினுஷா. இவர்களது திருமணத்தில் சின்னத்திரை பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டு வாழ்த்தினர். திருமணம் முடிந்த கையோடு, புதுமணத் தம்பதிகளான வினுஷா - லிங்கேஸ்வரன் இருவரும் தங்களது ஹனிமூன் பயணத்திற்காக இலங்கைக்கு சென்றுள்ளனர். வினுஷாவின் சக சின்னத்திரை தோழிகளும், லட்சக்கணக்கான ரசிகர்களும் "மேட் ஃபார் ஈச் அதர்... கண்ணம்மாவுக்கு நல்ல வாழ்க்கை அமைஞ்சிருக்கு என வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.