📅 Saturday, 10 October 2026 IST | புரட்டாசி 24, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Latest News October 10, 2026 07:03 AM

காவிரி நீர் பங்கீடு விவகாரம்: உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மனு

காவிரி நீர் பங்கீடு விவகாரம்: உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மனு

புதுடெல்லி: காவிரி நீர் பங்கீடு தொடர்பாக தமிழநாடு அரசு தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் உமாபதி உச்ச நீதிமன்றத்தில் ஒரு கூடுதல் மனுவை தாக்கல் செய்துள்ளார். அதில், \”உச்ச நீதிமன்றத்தின் இறுதி தீர்ப்பின்படி தமிழகத்திற்கான காவிரி தண்ணீரை உறுதி செய்ய வேண்டும். தற்போது தமிழகத்திற்கு 15.02 டி.எம்.சி நீர் பற்றாக்குறையாக உள்ளது. எனவே அதனை பெற்றுத்தரும் விதமாக வினாடிக்கு 15,050 கன அடி வீதம்,அடுத்த பத்து நாட்களுக்கு கர்நாடகம் அரசு, தமிழகத்திற்கு திறந்து விட உத்தரவிட வேண்டும்.

அதேப்போன்று கடந்த செப்டம்பர் 29ம் தேதி முதல் அக்டோபர் 7ம் தேதி வரையிலான காலகட்டத்தில் நீர் திறக்காததால் ஏற்பட்ட 0.94 டி.எம்.சி நீர் பற்றாக்குறையை பூர்த்தி செய்ய உத்தரவிட வேண்டும். மேலும் காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் உத்தரவுகளை கர்நாடகம் செயல்படுத்துவதை இந்த நீதிமன்றம் உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.