📅 Thursday, 01 October 2026 IST | புரட்டாசி 15, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Tamil Nadu October 01, 2026 01:04 PM

காதலனிடம் ரூ.15 லட்சம் மோசடி: பெண் காவலர் கைது

காதலனிடம் ரூ.15 லட்சம் மோசடி: பெண் காவலர் கைது

காதலனிடம் ரூ.15 லட்சம் மோசடி: பெண் காவலர் கைது

திருவாரூர்: திருவாரூர் தாலுகா தென்னவராயநல்லூர் கிராமத்தில் வசித்து வருபவர் ரமணி மகன் ராஜமாணிக்கம் (36). வெளிநாட்டில் வேலை பார்த்து வரும் ராஜமாணிக்கத்துக்கும், திருவாரூர் அருகே அகர திருநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த செல்வராஜ் மகள் கோவை பட்டாலியன் கம்பெனி சி பிரிவை சேர்ந்த சி.ஆர்.பி.எப் பெண் காவலர் செமிலா (29) என்பவருக்கும் இடையே காதல் ஏற்பட்டது.

இந்நிலையில் செமிலாவை திருமணம் செய்து கொடுப்பதாக கூறி அவரது தாய் சசிகலா (46), காதலன் ராஜமாணிக்கத்திடம் பல தவணைகளாக ரூ.15 லட்சத்து 37 ஆயிரம் வரை பெற்றதாக கூறப்படுகிறது. ஆனால் கூறியபடி செமிலாவை திருமணம் செய்து கொடுக்காமலும், வாங்கிய தொகையை திருப்பி கொடுக்காமலும் சசிகலா மற்றும் அவரது மகள் ஆகியோர் காலம் தாழ்த்தி வந்துள்ளனர்.

இதுதொடர்பாக ராஜமாணிக்கம் திருவாரூர் தாலுகா காவல்நிலையத்தில் நேற்றுமுன்தினம் புகார் கொடுத்தார். இதுகுறித்து இன்ஸ்பெக்டர் ஜெயந்தி வழக்கு பதிவு செய்து பெண் காவலர் செமிலா, அவரது தாய் சசிகலா, சகோதரர் கோகுல்ராஜ் (23) ஆகிய 3 பேரை நேற்று கைது செய்தனர். இதில் பெண் காவலர் சமிலா மட்டும் நீதிமன்றம் மூலம் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இதில் கைதான சசிகலா திருவாரூர் மகளிர் கிளை சிறையிலும், கோகுல்ராஜ் நாகை கிளை சிறையிலும் அடைக்கப்பட்டனர்.