📅 Thursday, 01 October 2026 IST | புரட்டாசி 15, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Cinema September 30, 2026 09:02 PM

காரின் மேற்கூரையில் தொங்கியபடி கடத்தல்காரர்களை விரட்டிப் பிடித்த தலைமை காவலர்: முதல்வர் விஜய் நேரில் பாராட்டு!

காரின் மேற்கூரையில் தொங்கியபடி கடத்தல்காரர்களை விரட்டிப் பிடித்த தலைமை காவலர்: முதல்வர் விஜய் நேரில் பாராட்டு!

காரின் மேற்கூரையில் தொங்கியபடி கடத்தல்காரர்களை விரட்டிப் பிடித்த தலைமை காவலர்: முதல்வர் விஜய் நேரில் பாராட்டு!

கோவை: கோவையில் காரின் மேற்கூரையில் தொங்கியபடி சுமார் 40 கிலோமீட்டர் தூரம் சென்று குட்கா கடத்தல்காரர்களை விரட்டிப் பிடித்த தலைமை காவலர் வேல்முருகனை தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேரில் அழைத்து பாராட்டினார்.

கோவை மாவட்டம், கோவில்பாளையம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் கடந்த 27ஆம் தேதி போலீசார் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது குட்கா பொருட்களை கடத்தி வந்த காரை போலீசார் தடுத்து நிறுத்த முயன்றனர். ஆனால், போலீசாரின் சோதனையை மீறி அந்த கார் நிற்காமல் வேகமாகச் சென்றது.

இதையடுத்து, தலைமை காவலர் வேல்முருகன் துணிச்சலுடன் அந்த காரில் ஏறி, அதன் மேற்கூரையில் தொங்கியபடியே பயணித்துள்ளார். சுமார் 40 கிலோமீட்டர் தூரம் அந்த காரைத் தொடர்ந்து சென்ற அவர், கடத்தல்காரர்கள் தப்பிச் செல்லாமல் கண்காணித்துள்ளார். அவிநாசி அருகே சென்றபோது கார் நிறுத்தப்பட்டது. அதில் இருந்த மூன்று நபர்களை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து சுமார் 233 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

தலைமை காவலர் வேல்முருகனின் துணிச்சலான செயலுக்கு அப்போதே மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நேரில் அழைத்து பாராட்டு தெரிவித்திருந்தார். மேலும், பல்வேறு தரப்பினரும் அவரைப் பாராட்டி வந்தனர். இந்த நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் தலைமை காவலர் வேல்முருகனை நேரில் சந்தித்து, அவரது துணிச்சலான செயலையும் சிறப்பான பணியையும் பாராட்டினார். தலைமை காவலர் வேல்முருகனின் இந்த துணிச்சலான செயலுக்கு தமிழகம் முழுவதும் பல்வேறு தரப்பினரும் தொடர்ந்து பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர்.