📅 Sunday, 18 October 2026 IST | ஐப்பசி 1, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Tamil Nadu October 17, 2026 09:03 PM

காஞ்சிபுரம்

காஞ்சிபுரம்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் பெய்த கனமழையால் காஞ்சிபுரம் - வாலாஜாபாத் ரயில் பாதையில் பூசிவாக்கம் அருகே தண்டவாளத்தை ஒட்டிய பகுதியில் நேற்று இரவு மண் சரிவு ஏற்பட்டது. இதனால் சென்னை கடற்கரை - திருமால்பூர் இடையிலான மின்சார ரயில் சேவை பாதிக்கப்பட்டது. மேலும், 4 ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டன.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாகப் பெய்து வரும் கனமழையால், பூசிவாக்கம் அருகே சுரங்கப்பாதை அமைக்கும் பணி நடைபெற்று வரும் இடத்தில் மண் சரிவு ஏற்பட்டது. இதையடுத்து, பாதுகாப்பு கருதி அந்த வழித்தடத்தில் ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.

சென்னை கடற்கரையிலிருந்து காஞ்சிபுரம் நோக்கி வந்த ரயில்கள் வாலாஜாபாத் ரயில் நிலையத்திலும், திருமால்பூரிலிருந்து சென்னை கடற்கரை நோக்கிச் சென்ற ரயில்கள் காஞ்சிபுரம் ரயில் நிலையத்திலும் நிறுத்தப்பட்டன. இதனால் பயணிகள் சிரமத்துக்கு ஆளாகினர்.

இதற்கிடையே, பயணிகளின் சிரமத்தைக் குறைக்க ரயில்வே நிர்வாகம் மாற்று ஏற்பாடுகளைச் செய்தது. காஞ்சிபுரத்தில் நிறுத்தப்பட்ட ரயில்களை அரக்கோணம் நோக்கி இயக்க ஏற்பாடு செய்யப்பட்டது. பாதிக்கப்பட்ட பகுதியில் ரயில்வே ஊழியர்கள் சீரமைப்புப் பணிகளில் ஈடுபட்டனர்.

இந்தச் சம்பவத்தால் சென்னை கடற்கரையிலிருந்து இயக்கப்பட வேண்டிய 3 ரயில்களும், திருமால்பூரிலிருந்து இயக்கப்பட வேண்டிய ஒரு ரயிலும் ரத்து செய்யப்பட்டன. இந்த மண் சரிவு சரி செய்யப்பட்டு அதிகாலை 2 மணிக்கு ரயில்கள் இயக்கப்பட்டன.