📅 Sunday, 04 October 2026 IST | புரட்டாசி 18, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Cinema October 04, 2026 08:03 AM

ஜெய் ஷாவை பார்த்ததும் வைபவ் சூர்யவன்ஷி செய்த செயல்.. சமூக வலைதளங்களில் பரவும் புகைப்படம்

ஜெய் ஷாவை பார்த்ததும் வைபவ் சூர்யவன்ஷி செய்த செயல்.. சமூக வலைதளங்களில் பரவும் புகைப்படம்

ஜெய் ஷாவை பார்த்ததும் வைபவ் சூர்யவன்ஷி செய்த செயல்.. சமூக வலைதளங்களில் பரவும் புகைப்படம்

நிஷின்: ஆசிய விளையாட்டுப் போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி இந்திய அணி தங்கம் வென்ற நிலையில், ஐசிசி தலைவர் ஜெய் ஷாவின் காலில் விழுந்து இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி ஆசி பெற்ற வீடியோ இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது.

2026 ஆசிய விளையாட்டுப் போட்டிகள் தொடரின் ஆடவர் கிரிக்கெட் இறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 211 ரன்கள் குவித்தது. தொடக்க வீரராக களமிறங்கிய இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி 9 பந்துகளில் 2 சிக்சர்களுடன் 15 ரன்கள் எடுத்தார்.

அதிரடியாக விளையாடிய அபிஷேக் சர்மா 28 பந்துகளில் 7 சிக்சர்கள், 3 பவுண்டரிகளுடன் 61 ரன்கள் விளாசினார். இறுதி ஓவர்களில் அதிரடி காட்டிய திலக் வர்மா வெறும் 22 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 51 ரன்கள் குவித்தார். தொடர்ந்து 212 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 192 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது. அந்த அணியில் அதிகபட்சமாக ஹசன் நவாஸ் 96 ரன்கள் எடுத்தார்.

பாகிஸ்தானை வீழ்த்திய இந்திய அணி தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்கப் பதக்கத்தை வென்று சாதனை படைத்தது. இந்தப் போட்டி முடிந்ததும் வீரர்களை நேரில் சந்தித்து வாழ்த்து கூற சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தலைவர் ஜெய் ஷா மைதானத்திற்கு வந்தார். அவர் இந்திய கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர், ரவி பிஷ்னோய் ஆகியோருக்கு கைகுலுக்கி வாழ்த்து தெரிவித்தார்.

அப்போது வாழ்த்து பெற வந்த 15 வயது தொடக்க ஆட்டக்காரர் வைபவ் சூர்யவன்ஷி, ஜெய் ஷாவுடன் கைகுலுக்கிய கையோடு அவரது கால்களைத் தொட்டு வணங்கி ஆசி பெற்றார். வைபவ் சூர்யவன்ஷியின் இந்த செயல் சமூக வலைதளங்களில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து பரவி வருகிறது.

மேலும், இந்த சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தலைவராக இருக்கும் ஜெய் ஷா தான் இந்திய அணிக்கு தங்கப் பதக்கங்களை அணிவித்தார்.