📅 Saturday, 17 October 2026 IST | புரட்டாசி 31, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Cinema October 17, 2026 10:03 PM

Jailer 2: வடமாநில மல்டிப்ளக்ஸ்களில் ரிலீஸாகாத ஜெயிலர் 2; ரசிகர்கள் கவலை; காரணம் என்ன?

Jailer 2: வடமாநில மல்டிப்ளக்ஸ்களில் ரிலீஸாகாத ஜெயிலர் 2; ரசிகர்கள் கவலை; காரணம் என்ன?

Jailer 2: வடமாநில மல்டிப்ளக்ஸ்களில் ரிலீஸாகாத ஜெயிலர் 2; ரசிகர்கள் கவலை; காரணம் என்ன?

சன் பிக்சர்ஸ் நிறுவனம், 'ஜெயிலர் 2' படத்தை திரையரங்குகளில் வெளியான 4 வாரங்களுக்குள் ஓடிடி தளத்தில் வெளியிட ஒப்பந்தம் செய்துள்ளது.

நடிகர் ரஜினிகாந்த்தின் 'ஜெயிலர் 2' திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி மாபெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.

ஆனால், வட இந்தியாவிலுள்ள ரஜினிகாந்த் ரசிகர்கள் கவலையில் இருக்கின்றனர்.

வட இந்தியாவில் உள்ள பி.வி.ஆர் ஐநாக்ஸ், சினேபோலிஸ் போன்ற முன்னணி மல்டிபிளக்ஸ் திரையரங்குகளில் 'ஜெயிலர் 2' திரைப்படம் திரையிடப்படாததே ரஜினி ரசிகர்களின் கவலைக்குக் காரணம்.

சன் பிக்சர்ஸ் நிறுவனம், 'ஜெயிலர் 2' திரையரங்குகளில் வெளியான 4 வாரங்களுக்குள் ஓடிடி தளத்தில் படத்தை வெளியிட ஒப்பந்தம் செய்துள்ளது.

ஆனால், பாலிவுட்டில் திரையரங்க உரிமையாளர்களின் விதியின்படி, ஒரு திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி 8 வாரங்களுக்குப் பிறகே ஓடிடியில் வெளியாக வேண்டும்.

ஆனால், திரைப்படம் நான்கு வாரங்களில் வெளியாகவிருப்பதால் பி.வி.ஆர் ஐநாக்ஸ், சினேபோலிஸ் திரையரங்குகள் 'ஜெயிலர் 2' படத்தைத் திரையிட மறுத்துவிட்டன.

வட மாநிலங்களில் 'ஜெயிலர் 2' படத்தைச் சில குறிப்பிட்ட சிங்கிள் ஸ்கிரீன் தியேட்டர்கள் மற்றும் ஒரு சில மல்டிபிளக்ஸ்களில் மட்டுமே பார்க்க முடிகிறது என ரஜினி ரசிகர்கள் கவலை தெரிவிக்கிறார்கள்.