📅 Thursday, 08 October 2026 IST | புரட்டாசி 22, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Cinema October 08, 2026 11:01 AM

Jailer 2 First Review

Jailer 2 First Review

சென்னை: நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்திருக்கும் ஜெயிலர் 2 திரைப்படம் அக்டோபர் 15ஆம் தேதி ரிலீஸாகவிருக்கிறது. இதன் முதல் பாகம் மெகா ஹிட்டாகியிருப்பதால் இதன் மீதும் எக்கச்சக்க எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது. படத்துக்கு சென்சார் அதிகாரிகள் யு/ஏ சான்றிதழும் கொடுத்திருக்கிறார்கள். இந்நிலையில் ஜெயிலர் 2 முதல் விமர்சனம் வெளியாகியிருக்கிறது.

ரஜினிகாந்த்தும், நெல்சன் திலீப்குமாரும் முதன்முறையாக ஜெயிலர் படத்தில் இணைந்தார்கள். அந்தப் படத்துக்கு முன்னதாக இரண்டு பேருமே தோல்வி முகத்தில்தான் இருந்தார்கள். எனவே அப்படம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்பட்டது. அந்த பொறுப்பை உணர்ந்து இரண்டு பேருமே உழைத்ததன் காரணமாக; படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆகி 700 கோடி ரூபாய்வரை உலகம் முழுவதும் வசூலித்தது. அப்போதே இதன் இரண்டாவது பாகத்தை உருவாக்குவதற்கு அந்த டீம் ரெடியாகிவிட்டது.

ஜெயிலர் 2: அதன்படி ஜெயிலர் 2 படம் ஆரம்பிக்கப்பட்டது. முதல் பாகத்தில் நடித்த மோகன் லால், சிவராஜ்குமார், ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்டோர் இதிலும் கமிட்டானார்கள். ஷாருக்கானை கேமியோ ரோலில் நடிக்க வைக்க நெல்சன் எடுத்த முயற்சிகள் எதுவும் கைகொடுக்கவில்லை. கூலி படத்துக்கு அமீர் கானை அழைத்து சென்று மோசம் செய்தது போல் இதிலும் செய்துவிடுவார்களோ என்ற அச்சத்தில்தான் அவர் நடிக்கவில்லை என்று சிலர் சொன்னார்கள். அதனையடுத்து ஷாருக்கிற்கு பதிலாக ஹிருத்திக் ரோஷன் நடித்திருக்கிறார்.

ஒரு வாரத்தில் ரிலீஸ்: இவர்கள் தவிர்த்து வித்யா பாலன், விஜய் சேதுபதி, எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்டோரும் இதில் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது. முதல் பாகம் போன்றே இரண்டாவது பாகமும் தரமான சம்பவம் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. படமானது அக்டோபர் 15ஆம் தேதி ரிலீஸாகிறது. இன்னும் ஒரு வாரம் மட்டுமே இருப்பதால் ப்ரோமோஷன் பணிகளும் சூடு பிடித்திருக்கின்றன. ஜெயிலர் 2 சூப்பர் ஷோ என்ற பெயரில் நாளை சென்னையில் நிகழ்ச்சியும் நடக்கிறது. ரஜினிகாந்த், கலாநிதி மாறன் என ஒட்டுமொத்த படக்குழும் அதில் பங்கேற்கிறார்கள்.

ஜெயிலர் 2 முதல் விமர்சனம்: படத்துக்கு சென்சார் அதிகாரிகள் யு/ஏ சான்றிதழ் கொடுத்திருக்கிறார்கள். படத்தின் ரன்னிங் டைம் இரண்டு மணி நேரம் 45 நிமிடங்கள் ஆகும். படத்துக்கு எக்கச்சக்க ஹைப் எகிறியிருக்கும் சூழலில்; ஜெயிலர் 2 முதல் விமர்சனமும் வந்திருக்கிறது. அதன்படி B Filmy Tweets என்ற எக்ஸ் பக்கத்தில் வெளியாகியிருக்கும் விமர்சனத்தில், ரசிகர்கள் எதிர்பார்க்கும் மாஸ் விஷயங்கள் எல்லாம் இதில் இருக்கிறதாம். ஆக்‌ஷன் காட்சிகள் நான் ஸ்டாப்பாக நடக்கின்றன என்றும்; படம் முழுக்க ஒரு ராம்பேஜ் போல் செல்கிறது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

கேமியோ உண்டு: ஸ்லோ மோஷன் காட்சிகளில் மாஸ் பிஜிஎம் சிறப்பாக எடுபடுகின்றன. அந்த சீன்களும் ஒர்க் அவுட் ஆகியிருக்கின்றன. மேலும் ஒரு சூப்பர் ஸ்டாரின் கேமியோவும் இருக்கிறது. காமெடியும் நன்றாக ஒர்க் அவுட் ஆகியிருப்பதாகவும், பிஜிஎம் மட்டும் கொஞ்சம் சொதப்பியிருப்பதாகவும் சொல்லப்பட்டிருக்கிறது. முதல் பாகத்தைவிடவும் சூப்பராக இல்லாவிட்டாலும் முழு ட்ரீட் இருக்கிறதாம். வில்லன் கதாபாத்திரம் ஷோ ஸ்டீலராக இருக்கிறது என்றும், பாடல்களும் பலமாக இருக்கின்றன என்றும் கூறப்பட்டு, திருவிழா போன்ற அனுபவத்தை படம் கொடுக்கும், கண்டிப்பாக Solid ஹிட் என்று தெரிவித்திருக்கிறார்கள். இந்த முதல் விமர்சனம் பாசிட்டிவ்வாக இருப்பதால் ரஜினி ரசிகர்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள்.