ITR தாக்கல் செய்பவர்கள் கவனத்திற்கு : இந்த 5 தவறுகளால் 200 % அபராதம் விதிக்கப்படும்:உஷாரா இருங்க
வருமான வரி தாக்கல் செய்யும்போது நம்மை அறியாமல் ஒரு சில சிறிய தவறுகள் ஏற்படுவது இயல்பு தான். ஆனால் அதில் சில தவறுகள் கண்டிப்பாக தவிர்க்க வேண்டியவையாக இருக்கும். அதுபோன்ற தவிர்க்க வேண்டிய தவறுகளை செய்தால் மிகப்பெரிய அபராதங்களை நாம் சந்திக்க நேரிடும். ஒருவர் வருமான வரி தாக்கல் செய்யும்போது குறிப்பிட்ட சில தவறுகளை செய்திருந்தால் வருமான வரித்துறை செலுத்த வேண்டிய தொகையில் 200 % அபராதம் விதிக்கப்படலாம்.இதில் தாமத கட்டணம் என்பது வேறு.ஒரு சிலர் தாமத கட்டணத்தையும் வருமான வரித்துறை தாக்கல் செய்யும்போது நடக்கும் தவறுகளுக்கான அபராததையும் குழப்பிக்கொண்டு இருக்கின்றனர். தாமத கட்டணம் என்பது வருமான வரியை தாமதமாக செலுத்துவதற்கான கட்டணமாகும். அந்த கட்டணம் 1000 முதல் 5000 வரை இருக்கலாம். ஆனால் வருமான வரி தாக்கல் படிவத்தில் நாம் சில தவறுகளை செய்தால் அதற்கு கடுமையான அபராதம் விதிக்கப்படும். அந்த தவறுகள் என்ன ? அதனை எப்படி தவிர்ப்பது ? என்பதை பார்க்கலாம்200 % அபராதம் விதிக்கப்படும் முக்கிய தவறுகள்1.வாடகை செலுத்தாமல் போலி வீட்டு வாடகை விலக்கு அல்லது 80C மற்றும் மருத்துவ காப்பீடு தொடர்பான போலியான கோரிக்கைகளை போலி ஆவணங்கள் மூலம் கூறுவது மிகப்பெரிய தவறாகும். இதனால் நமக்கு 200 % அபராதம் விதிக்கப்படலாம்.2.கூடுதல் வங்கி கணக்குகளை கணக்கில் காட்டாமல் இருப்பது. அதாவது சம்பளம் வரும் வங்கி கணக்கை மட்டும் கணக்கில் காட்டி கூடுதல் வட்டி வருமானம் தரும் கணக்குகளை காட்டாமல் இருந்தால் கடுமையான அபராதம் விதிக்கப்படும்3.பங்குசந்தை, சொத்து விற்பனை போன்றவற்றில் லாபம் வந்து அந்த லாபத்தை மறைப்பதும் மிகப்பெரிய தவறாகும்4.போலி பில்கள் மூலம் தங்களுடைய வருமானத்தை குறைத்து காண்பித்தாலும் 200 % அபராதம் விதிக்கப்படும்5.வெளிநாட்டு சொத்துக்கள் அல்லது வெளிநாட்டு வருமானத்தை மறைப்பதும் மிகப்பெரிய தவறேஇந்நிலையில் மேலே குறிப்பிடப்பட்டுள்ள இந்த ஐந்து தவறுகளை நாம் கண்டிப்பாக வருமான வரி தாக்கல் செய்யும்போது தவிர்க்க வேண்டும். இல்லையெனில் நாம் செலுத்த வேண்டிய வரி தொகையை விட 200 % அபராதமாக செலுத்த வேண்டி வரும் என்பது குறிப்பிடத்தக்கது