📅 Friday, 02 October 2026 IST | புரட்டாசி 16, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Politics October 02, 2026 07:02 PM

இருமொழிக் கொள்கை என்பது தமிழகத்தில் உயிர்க்கொள்கை: ஸ்டாலின் உறுதி

இருமொழிக் கொள்கை என்பது தமிழகத்தில் உயிர்க்கொள்கை: ஸ்டாலின் உறுதி

சென்னை: இருமொழிக் கொள்கை என்பது தமிழகத்தின் உயிர்க்கொள்கை. அதில் விளையாட வேண்டாம் என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

அவரது அறிக்கை: இதுவரை மத்திய அரசின் ஹிந்தித் திணிப்பைத்தான் தமிழகம் எதிர்கொண்டு வந்தது. தற்போது, மாநில அரசே அந்தப் பணியைச் செய்வதுதான் அவர்கள் சொன்ன மாற்றம் போல. எல்லாவற்றிலும், ஆழம் பார்த்துவிட்டு, எதிர்ப்பு கிளம்பியதும் 'U Turn' அடிக்கும் த.வெ.க. அரசின் மற்றுமொரு முயற்சியா இது?

வடமாநில influencer-களுக்காக ரீல்ஸ் ஆட்சி நடத்தும் தவெக அரசு இதன் ஆபத்தை உணர்ந்து, உடனடியாகத் தனது அணுகுமுறையை மாற்றிக்கொள்ள வேண்டும் என எச்சரிக்கிறேன். இருமொழிக் கொள்கை என்பது தமிழகத்தின் உயிர்க்கொள்கை. அதில் விளையாட வேண்டாம். இவ்வாறு ஸ்டாலின் கூறியுள்ளார்.