📅 Saturday, 12 September 2026 IST | ஆவணி 27, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Videos news September 12, 2026 07:37 AM

இரட்டை கோபுர தாக்குதல் சம்பவம்: பாராட்டு மழையில் இந்திய டாக்சி டிரைவர்

இரட்டை கோபுர தாக்குதல் சம்பவம்: பாராட்டு மழையில் இந்திய டாக்சி டிரைவர்

அமெரிக்காவை நடுநடுங்க வைத்த இரட்டை கோபுர தாக்குதல் நினைவு தினம் முன்னிட்டு, இந்திய டாக்சி டிரைவர் குர்விந்தர் சிங் பற்றிய வீடியோ வலைதளங்களில் வேகமாக பரவியுள்ளது. சம்பவம் நடந்த அன்று நியூயார்க்கில் போக்குவரத்து வசதி முற்றிலும் ஸ்தம்பித்து விட்டது. வீடு திரும்ப வழியற்றவர்களுக்காக, நுாற்றுக்கணக்கான முறை, கட்டணமின்றி டாக்சி இயக்கினார் குர்விந்தர். தொடர்ந்து 40 நாள் இப்படி கட்டணம் வாங்காமல் பணியாற்றியுள்ளார்.

அவரது செயலை பாராட்டியும் நன்றி தெரிவித்தும் அப்போதைய நியூயார்க் மேயர் ருடி ஜிலானி கடிதம் அனுப்பியுள்ளார். 9/11 நினைவு தினம் முன்னிட்டு பேட்டி அளித்த குர்விந்தர், 'அனைத்து மக்களையும் நேசியுங்கள், அனைவரையும் மதியுங்கள், கடவுள் உங்களை ஆசிர்வதிக்கட்டும்' என்று கூறியுள்ளார். வலைதளவாசிகள் பலரும், அவரை பாராட்டி பதிவிட்டு வருகின்றனர்.

கழுத்தில் டிராக்டர் டயர் சிக்கிய நிலையில், அசாம் வனத்தில் பரிதாபமாக சுற்றித்திரிந்த யானையின் வீடியோக்கள் இணையத்தில் பரவின. அதைக்கண்ட வனத்துறையினர், கோலகாட் மாவட்டத்தில் யானையின் இருப்பிடத்தை தேடி கண்டறிந்தனர். மயக்க ஊசி செலுத்தி யானையை மடக்கிய வனத்துறை ஊழியர்கள், அதன் கழுத்தில் மாலை போல சிக்கியிருந்த டயரை மிகுந்த முன்னெச்சரிக்கையுடன் அகற்றினர். தேவையான சிகிச்சையும் அளிக்கப்பட்டது.

மஹாராஷ்டிரா, நாக்பூர் எஸ்.பி.ஐ., வங்கி கிளையில் புகுந்த முகமூடி ஆசாமி, பை நிறைய மிளகாய்ப்பொடியை வைத்துக் கொண்டு ஊழியர்கள் மீது வீசி வீசி அடித்த வீடியோ, இணையத்தில் வேகமாக பரவியுள்ளது.

கேஷியர் மீது மிளகாய்ப்பொடி வீசிய அந்த ஆசாமி, கேஷ் கவுன்ட்டரில் இருந்த 4 லட்சம் ரூபாயை பறித்துக் கொண்டார். அப்படியும் அவர் ஆசை தீரவில்லை. பையில் இருந்த மிளகாய்ப்பொடியை கை நிறைய அள்ளி எடுத்து, வங்கியில் இருந்த ஊழியர்கள் ஒவ்வொருவர் மீதும் வீசியடித்தார்.

பெஞ்ச்சின் மீது படுத்துக் கொண்டு, 'இப்ப விடு பார்க்கலாம்' என்று கெத்தாக கூறி, பளு துாக்கி, மூக்கை உடைத்துக் கொள்ளும் வடிவேலுவின் காமெடி ஏகப் பிரசித்தம். 'அப்படி ஒரு சம்பவம் நடந்து விடக்கூடாதே' என்று பார்க்கும் யாவரும் அஞ்சும்படியான செயலில் இறங்கினார், மங்கோலிய அதிபர் உக்னாகின் குரேல்சுக், 58. உடற்பயிற்சி கூடம் சென்றவர், கோட், கடிகாரத்தை கழற்றி விட்டு, உற்சாகத்துடன் பெஞ்ச் மீது படுத்து பளு துாக்கினார். 100 கிலோ எடை ஏற்றப்பட்டது. அதை, 20 முறை நெஞ்சுக்கு மேல் உயர்த்தி விட்டுத் தான் எழுந்தார் அதிபர். சுற்றி இருந்தவர்கள் கைதட்டி ஆரவாரம் செய்து பாராட்டினர்.

தனியார் நிறுவனங்களில், 326 முறை முயற்சித்தும் வேலை கிடைக்காத இளைஞர் ஒருவர், கடைசியில் சமூக வலைதளத்தில், 'கன்டென்ட் கிரியேட்டர்' ஆகியுள்ளது, இணையவாசிகள் மத்தியில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. நியோ வெய்லி என்ற அந்த இளைஞர், தான் வேலையில்லாமல் இருப்பது பற்றிய தொடர் பதிவுகளை சமூக வலைதளத்தில் வெளியிட்டார்.