இந்தியாவில் அதிகரிக்கும் 3 ஆன்லைன் மோசடிகள் : பாதிக்கப்பட்ட 67 % பேருக்கு பணம் கிடைக்கவில்லையா ? ஆய்வு முடிவுகளால் அதிர்ச்சி
இந்தியாவில் நாளுக்கு நாள் ஆன்லைன் மோசடிகள் அதிகரித்து வருகின்றன. இந்த ஆன்லைன் மோசடிகளால் பலர் தங்களின் பணத்தை இழந்து கஷ்டப்படுகின்றனர். இந்த நிலையில் GSMA India Consumer Scam Report 2026 வெளியிட்டுள்ள அறிக்கை அதிர்ச்சியளிக்கும் வகையில் இருக்கின்றது. அதாவது இந்தியாவில் சைபர் மோசடியில் சிக்கி பணத்தை இழந்தவர்களில் 67 % பேருக்கு ஒரு ரூபாய் கூட திரும்ப கிடைக்கவில்லையாம். இந்த விஷயம் தான் இந்திய மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது. மேலும் GSMA அறிக்கையின் படி கடந்த ஒரு வருடத்தில் மட்டும் 12 % நுகர்வோர்கள் நேரடியாக மோசடிக்கு ஆளானதாக கூறியுள்ளனர்.மேலும் 39 % நபர்கள் தங்களுக்கு தெரிந்த நண்பர்கள் மற்றும் உறவினர்கள் பாதிக்கப்பட்டு இருப்பதாக தெரிவித்து இருக்கின்றனர். மேலும் GSMA அறிக்கையின் படி அதிகமான ஆன்லைன் மோசடி வழக்குகள் என்பது மூன்று வகைகளில் தான் பதிவாகி இருக்கின்றதுஆன்லைன் ஷாப்பிங் மோசடி -33 % வழக்குகளும், லாட்டரி மற்றும் பரிசு பொருட்கள் மோசடி 31 %. போலி வேலை மற்றும் பகுதி நேர வருமான மோசடி 30 % ஆகியவற்றில் தான் அதிகமான வழக்குகள் பதிவாகி இருக்கின்றனஆன்லைன் ஷாப்பிங் மோசடிபோலி மின் வணீக இணையதளங்கள் மற்றும் சோஷியல் மீடியாக்களில் பொருட்களுக்கு அதிக தள்ளுபடி தருவதாக கூறி போலி கட்டண இணைப்புகள் மூலம் பணத்தை பறிப்பதுலாட்டரி -பரிசு பொருட்கள் மோசடிஉங்களுக்கு லாட்டரி டிக்கெட்டில் பல லட்சம் பரிசு விழுந்துள்ளது, விலையுயர்ந்த பொருட்கள் பரிசாக கிடைத்துள்ளது என கூறி செயலாக்க கட்டணத்தை பெற்று மோசடி செய்வதுபோலி வேலை -பகுதி நேர வருமான மோசடிவீட்டில் இருந்தபடியே தினம் ஆயிரக்கணக்கில் சம்பாதிக்கலாம் என கூறி பண மோசடியில் ஈடுபடுவதுஇதைத்தவிர QR குறியீடு மற்றும் போலி கட்டண இணைப்பு போன்றவை மூலமும் பண மோசடி நடந்துள்ளது. இதை தவிர AI மற்றும் Deepfake மூலமாகவும் ஆன்லைன் மோசடிகள் நடந்து வருகின்றன.சரி செய்யும் வழிநாம் ஆன்லைன் மோசடியில் மூலம் பணத்தை இழந்த ஒரு மணி நேரத்திற்குள் நடவடிக்கை எடுப்பது அவசியம். ஒரு மணி நேரத்திற்குள் புகார் வழங்கினால் மோசடி செய்பவர்களின் வங்கி கணக்கு முடக்கப்படும். மேலும் பணத்தை திரும்ப பெரும் வாய்ப்பும் அதிகமாகும்