📅 Thursday, 10 September 2026 IST | ஆவணி 25, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Cinema September 04, 2026 04:00 PM

Immortal Review: இம்மார்ட்டல் விமர்சனம்.. காட்டேரி கயாடு கிட்ட இருந்து ஜி,வி. பிரகாஷ் தப்பித்தாரா?

Immortal Review: இம்மார்ட்டல் விமர்சனம்.. காட்டேரி கயாடு கிட்ட இருந்து ஜி,வி. பிரகாஷ் தப்பித்தாரா?

சென்னை: மாரியப்பன் சின்னா இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் குமார், கயாடு லோஹர் நடிப்பில் உருவாகியுள்ள இம்மார்ட்டல் திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியானது. இந்த ஆண்டு குறைந்த பட்ஜெட்டில் ஹாலிவுட்டில் வெளியாகி பல ஆயிரம் கோடி வசூலை அப்செஷன் திரைப்படம் அள்ளியது.

கோலிவுட்டிலும் இப்படியொரு படம் வந்தால் நல்லா இருக்குமே என நினைத்த நிலையில், ஏற்கனவே ஜி.வி. பிரகாஷ் அப்படியொரு படத்தை எடுத்து வைத்துள்ளார் என்று தான் இந்த படத்தை பார்க்கும்போது தோன்றுகிறது. டார்லிங் படத்துக்குப் பிறகு ஜி.வி. பிரகாஷுக்கு நல்லதொரு ஹாரர் படமாகவே இம்மார்ட்டல் உருவாகியுள்ளது. படத்தின் கதை, பாசிட்டிவ் மற்றும் மைனஸ் குறித்து விரிவாக பார்க்கலாம் வாங்க..

இம்மார்ட்டல் கதை: 4000 வருஷமாக இளைஞர்கள் ரத்தத்தைக் குடித்து உயிர் வாழும் ரத்தக் காட்டேரியாக கயாடு லோஹர் நடிப்பில் கலக்கியுள்ளார். அவரிடம் மாட்டிக் கொண்டு உயிருக்குப் போராடும் ஜி.வி. பிரகாஷ் தப்பித்தாரா? இல்லையா? என்பது தான் இம்மார்ட்டல் படத்தின் கதை.

படம் எப்படி இருக்கு?: வாடகைக்கு ரூம் தேடிக் கொண்டிருக்கும் பிரிண்டிங் பிரஸில் வேலை பார்த்துக் கொண்டிருக்கும் மஹிக்கு (ஜி.வி. பிரகாஷ் குமார்) சிந்து (கயாடு லோஹர்) ரூம் ஷேர் செய்துக் கொள்ள விருப்பம் இருந்தால் வீட்டுக்கு வாங்க என காஸ்ட்லி அபார்ட்மெண்ட் ஃபிளாட்டுக்கு அழைக்கிறார். 5 ஆயிரத்துக்கு ரூம் பார்க்கும் மஹிக்கு ஜம்முன்னு சிந்துவுடன் ரூம் ஷேர் பண்ண கிடைத்த நிலையில், அவரும் அங்கேயே செட்டில் ஆகிறார்.

செம ஜாலியாக கயாடு லோஹருடன் ரொமான்ஸ் செய்யும் காட்சிகளிலும், இளைஞர்களை சுண்டி இழுக்கும் ஆடைகளை அணிந்துக் கொண்டு கயாடு லோஹர் அழகு பதுமையாகவே வலம் வருகிறார். இடைவேளையின் போது அவரது சுயரூபம் தெரிய வர அவரிடமிருந்து தப்பிக்க ஜி.வி. பிரகாஷ் எடுக்கும் முயற்சிகள் எல்லாம் வீணாவதும், கயாடு அனுமதியின்றி அந்த ஃபிளாட்டை விட்டே செல்ல முடியாத அளவுக்கு மாட்டிக் கொள்ளும் ஜி.வி. பிரகாஷ், ஏற்கனவே இவரை போல வந்து அழகில் மயங்கி ஆபத்தை அனுபவித்தவர்களுக்கு நேர்ந்த கதி, ஜி.வி. பிரகாஷ் தப்பிக்கவே வழி இல்லை என்கிற நிலையில், கிளைமேக்ஸில் என்ன ஆனது என்பது தான் இந்த இம்மார்ட்டல் படம்.

பிளஸ்: ஜி.வி. பிரகாஷ் குமார், கயாடு லோஹர் தான் படத்தில் முக்கால்வாசி நேரத்தை எடுத்துக் கொள்கின்றனர். ஆனால் இருவர் மட்டுமே அதிக காட்சிகளில் இருந்தாலும், படத்தில் எந்த இடத்திலும் போர் அடிக்காமல் கயாடு லோஹர் பார்த்துக் கொண்டார் என்று தான் சொல்ல வேண்டும். ஜி.வி. பிரகாஷ் குமாரின் எதார்த்தமான நடிப்பும் படத்துக்கு பலமாக உள்ளது. சாம் சி எஸ் பின்னணி இசை கிளைமேக்ஸில் பெரிய பலமாகவும் பல இடங்களில் ஜம்ப் ஸ்கேர் மொமண்ட்டையும் நன்றாகவே கடத்துகிறது.

மைனஸ்: அப்செஷன் படத்தை போலவே சில விஷயங்களை விளக்காமல் அப்படியே ட்விஸ்ட் உடன் வைத்திருக்கலாம். கிளைமேக்ஸில் ஒரு ட்விஸ்ட் வைக்கப்பட்டு இருந்தாலும், ரத்தக் காட்டேரியுடன் ஜி.வி. பிரகாஷ் முட்டி மோதும் காட்சிகள் எல்லாம் சற்று தொய்வை ஏற்படுத்துகிறது. ஆனாலும், படம் எங்கேயும் போர் அடிக்காமல் கடகடவென ஓடி பக்காவாக முடிவதால் தாராளமாக தியெட்டர்களில் இம்மார்ட்டல் படத்தை பார்க்கலாம்.