📅 Wednesday, 23 September 2026 IST | புரட்டாசி 7, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Politics September 23, 2026 06:01 PM

GEM Veeramani: ஜெம் வீரமணி வழக்கு வாயையே திறக்காத அரசியல்வாதிகள், திரைப் பிரபலங்கள்

GEM Veeramani: ஜெம் வீரமணி வழக்கு வாயையே திறக்காத அரசியல்வாதிகள், திரைப் பிரபலங்கள்

GEM Veeramani: ஜெம் வீரமணி வழக்கு; வாயையே திறக்காத அரசியல்வாதிகள், திரைப் பிரபலங்கள் - விட்டு விளாசும் நெட்டிசன்கள்!

GEM Veeramani News Tamil: ஜெம் வீரமணி வழக்கு தமிழ்நாட்டையே உலுக்கியுள்ள நிலையில், இந்த விவகாரத்தில் அரசியல் தலைவர்கள் மற்றும் திரை பிரபலங்கள் வாய் திறக்காமல் இருப்பதற்கு கண்டனங்கள் குவிந்து வருகிறது.

தமிழ்நாட்டில் முதலமைச்சர் விஜய் தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது. பெண்கள் பாதுகாப்பு விவகாரத்தை பிரதானமாக தேர்தல் பரப்புரையின்போது கையில் எடுத்த விஜய் சிங்கப்பெண் சிறப்பு படை என்ற ஒன்றை உருவாக்கியுள்ளார்.

விஸ்வரூபம் எடுக்கும் ஜெம் வீரமணி வழக்கு:

இந்த நிலையில், மொத்த தமிழ்நாட்டையும் கடந்த ஒரு வார காலமாக உலுக்கி வரும் சம்பவமாக இருப்பது ஜெம் வீரமணி பாலியல் வழக்கு. அப்பாவி சிறுமிகளை ஜெம் வீரமணி தனது பாலியல் இச்சைகளுக்காக அனுபவித்து வந்த விவகாரம் மொத்த தமிழ்நாட்டையும் உலுக்கியுள்ளது.

இந்த விவகாரத்தில் அவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த விவகாரத்தில் தொடர்புடைய அனைவர் மீதும் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.

வாய் திறக்காத அரசியல் தலைவர்கள்:

இந்த ஜெம் வீரமணி மீதான பாலியல் குற்றச்சாட்டு கடந்த திமுக ஆட்சியில் 2025ம் ஆண்டே விசாரணைக்கு வந்துள்ளது. ஆனால், அப்போதைய திமுக ஆட்சியில் இந்த குற்றச்சாட்டு வெளியிலே வராமல் இருந்து வந்த நிலையில், தற்போது விஸ்வரூபம் எடுத்துள்ளது.

இந்த நிலையில், இந்த விவகாரம் கடந்த ஒரு வார காலமாக மொத்த தமிழ்நாட்டையும் உலுக்கி வரும் நிலையில், திமுக-வின் தலைவர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி இதுவரை எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை. திமுக-வின் முக்கிய தலைவரான கனிமொழி ஜெம் வீரமணியின் பெயரையே குறிப்பிடாமல் கண்டனம் தெரிவித்துள்ளார். திமுக-வின் இரண்டாம் கட்ட தலைவர்கள் மட்டுமே இதுதொடர்பாக பேசி வருகின்றனர்.

ஆப்சென்டான இபிஎஸ்:

அதிமுக-வின் பொதுச் செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமியும் இந்த விவகாரத்தில் தற்போது வரை வாய்திறக்கவில்லை. அதிமுக-வின் முக்கிய தலைவர்களும் இந்த விவகாரத்தில் ஜெம் வீரமணிக்கு எதிராகவோ, அப்போதைய திமுக அரசுக்கு எதிராகவோ எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை.

ஒரு வாரத்திற்கு பிறகு வாய் திறந்த சீமான்:

எந்தவொரு விவகாரத்திற்கும் உடனடியாக கருத்து தெரிவிக்கும் சீமான் கடந்த ஒரு வார காலத்திற்கு பிறகு இந்த விவகாரத்தில் இன்று கருத்து தெரிவித்துள்ளார். அண்ணாமலை போன்ற மற்ற முக்கிய அரசியல் தலைவர்களும் இந்த விவகாரத்தில் இந்த விவகாரத்தில் இதுவரை கருத்து தெரிவிக்கவில்லை.

தமிழ்நாட்டில் அரசியலையும், சினிமாவையும் மக்கள் பொதுவாக பிரித்துப் பார்ப்பதில்லை. தமிழ்நாட்டில் நடக்கும் அவலங்கள், இதுபோன்ற சமூக சீரழிவு நிகழ்வுகளுக்கு திரை பிரபலங்கள் உடனுக்குடன் கருத்து தெரிவித்து தங்களது கண்டனத்தை பதிவு செய்வார்கள்.

மெளன சாமியாரான திரை பிரபலங்கள்:

ஆனால், ஜெம் வீரமணி விவகாரத்தில் இதுவரை தமிழ் திரையுலக பிரபலங்கள் யாருமே வாய் திறக்கவில்லை. கடந்த அதிமுக ஆட்சியில் சூர்யா, விஜய் சேதுபதி, ஜோதிகா, போஸ் வெங்கட், வெற்றி மாறன், மாரி செல்வராஜ் என்ற பல திரைப்பிரபலங்கள் உடனுக்குடன் இதுபோன்ற சம்பவங்களுக்கு எதிர்வினை ஆற்றி வந்தனர். இவர்கள் போன்ற பல திரைப்பிரபலங்கள் கடந்த திமுக ஆட்சியில் ஆள் அரவமின்றி காணாமல் போனார்கள். பா.ரஞ்சித் மட்டும் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் மிக கடுமையான விமர்சனத்தை அப்போது முன்வைத்தார்.

ஆனால், இதுபோன்ற திரைப்பிரபலங்களும் இந்த விவகாரத்தில் தற்போது வரை எந்தவொரு கருத்தையும் தற்போது வரை தெரிவிக்கவில்லை. ஜெம் வீரமணி வழக்கில் அரசியல் தலைவர்கள் பலரும் வாய் திறக்காமலும், காலம் தாழ்த்தி கருத்து தெரிவித்ததற்கும் தொடர்ந்து பொதுமக்கள் மத்தியில் கண்டனம் குவிந்து வருகிறது.

இதுமட்டுமின்றி சமுதாயத்தில் நடக்கும் ஒவ்வொரு விவகாரத்திற்கும் திரை பிரபலங்கள் சமூக வலைதளங்கள் மூலமாக கண்டனங்களை பதிவு செய்து வரும் நிலையில், இந்த விவகாரத்தில் மட்டும் வாயை மூடி மெளனமாக இருப்பதால் சந்தர்ப்பவாத பிரபலங்கள் என்றும் அவர்களையும் ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர்.

தலைப்பு செய்திகள்

ஃபோட்டோ கேலரி