என் முதல் பிரியாரிட்டி என் குழந்தைதான்
என் முதல் பிரியாரிட்டி என் குழந்தைதான் – பிக்பாஸ் வாய்ப்பை நிராகரித்த ஜாய் கிரிஸில்டா
பிரபல தமிழ் தொலைக்காட்சியான விஜய் டீவியில் பிரபலமான ரியாலிட்டி ஷோக்களில் பிக்பாஸ் நிகழ்ச்சியும் ஒன்று. ஆரம்பத்தில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய இந்த நிகழ்ச்சியில் தற்போது விஜய் சேதுபதி வழங்கி வருகிறார். இந்த நிகழ்ச்சியின் 10வது சீசன் இம்மாதம் தொடங்க உள்ளது. இந்த சீசனில் ஜாய் கிரிஸில்டா கலந்துகொள்கிறார் என்று செய்திகள் வந்தன. இந்த நிலையில் இது குறித்து ஜாய் கிரிஸில்டா விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறுகையில் நான் பிக்பாஸ் வீட்டிற்குள் செல்லவில்லை என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறேன். என் […]
இந்த நிலையில் இது குறித்து ஜாய் கிரிஸில்டா விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறுகையில் நான் பிக்பாஸ் வீட்டிற்குள் செல்லவில்லை என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறேன். என் குழந்தை ராகா இன்னும் மிகவும் சிறியவன். அவனை விட்டுவிட்டு செல்வது எனக்கு சரியாகத் தோன்றவில்லை. எனவே, பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்கும் வாய்ப்பை நான் நிராகரித்துவிட்டேன். என்னைப் பொறுத்தவரை, என் குழந்தைதான் முதல் பிரியாரிட்டி என்று தெரிவித்துள்ளார்.
தற்போது குழந்தை சிறிய வயதில் இருப்பதால், அவரை விட்டுப் பல நாட்கள் பிக்பாஸ் வீட்டில் இருப்பது சரியாக இருக்காது எனக் கருதியே இந்த முடிவை எடுத்ததாக ஜாய் கிரிஸில்டா விளக்கம் அளித்துள்ளார்.
சாய் விகாஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 15 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் அசெய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர் மின் அஞ்சல் முகவரி [email protected]