📅 Thursday, 24 September 2026 IST | புரட்டாசி 8, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Latest News September 24, 2026 03:03 PM

எம்1 தொடர்பில் பேச்சுவார்த்தை: உறுதிப்படுத்திய ஸ்டார்ஹப், கெப்பல்

எம்1 தொடர்பில் பேச்சுவார்த்தை: உறுதிப்படுத்திய ஸ்டார்ஹப், கெப்பல்

எம்1 நிறுவனத்துடன் இணைவது குறித்துத் தாங்கள் பேச்சுவார்த்தை நடத்துவதை ஸ்டார்ஹப், கெப்பல் இரண்டும் உறுதிப்படுத்தியுள்ளன.

சிங்கப்பூரின் தொலைத்தொடர்புத் துறையை ஒன்றிணைக்க முயற்சிகள் எடுக்கப்பட்டுவருகின்றன. அந்த முயற்சிகளில் இது உள்ளடங்குவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிஸ்னஸ் டைம்ஸ் செய்திக்குப் பதில்

முன்னதாக பிஸ்னஸ் டைம்ஸ் வெளியிட்ட செய்தி அறிக்கைக்குக் பதிலளித்த ஸ்டார்ஹப்பும் கெப்பலும் பேச்சுவார்த்தை தொடர்வதாகவும் இறுதியில் பரிவர்த்தனை இடம்பெறும் என்று உறுதியாகக் கூற முடியாது என்றும் புதன்கிழமை (செப்டம்பர் 23) தனித்தனியாக அதிகாரபூர்வமாகத் தெரிவித்தன.

சிங்கப்பூரின் தொலைத்தொடர்புத் துறையை ஒன்றிணைப்பது முக்கியம் என்று நம்புவதாகச் சொன்ன கெப்பல், அதன் தொடர்பிலான வாய்ப்புகளைத் தொடர்ந்து ஆராய்வதாகக் கூறியது. கெப்பல், ஸ்டார்ஹப் இரண்டும் எம்1 சம்பந்தப்பட்ட ஒப்பந்தத்தின் தொடர்பில் மேல்நிலைப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாகத் தகவல் தெரிந்தவர்கள் முன்னதாக பிஸ்னஸ் டைம்சிடம் தெரிவித்தனர்.

முன்பு எம்1ஐ சிம்பா வாங்க வகைசெய்யும் 1.4 பில்லியன் வெள்ளி ஒப்பந்தம் எட்டப்பட்டது. ஆனால் கடந்த மே மாதம் அந்தப் பரிவர்த்தனை நடைபெறாமல் போனது.

அதிலிருந்து எம்1ல் உள்ளத் தங்களின் பங்குகளை விற்கத் தயாராய் இருப்பதாகக் கெப்பல் கூறிவருகிறது.

நிதி ஆலோசகர்கள்

இந்த விவகாரத்தில் ஸ்டார்ஹப், கெப்பல் இரண்டும் நிதி ஆலோசகர்களை நியமித்துவிட்டதாக வர்த்தகச் சஞ்சிகையான டிஎம்டி ஃபைனேன்ஸ் தெரிவித்தது. ஜேபிமோர்கன் ஸ்டார்ஹப்புக்கும் டிபிஎஸ் வங்கி கெப்பல், எம்1 இரண்டுக்கும் ஆலோசனை வழங்குவதாக அந்தச் சஞ்சிகை தெரிவித்தது.

ஸ்டார்ஹப்பும் எம்1உம் இணைந்தால் சிங்கப்பூரில் உள்ள கைப்பேசிக் கட்டமைப்புகளின் எண்ணிக்கை நான்கிலிருந்து மூன்றாகக் குறையும். அதற்கு அதிகாரபூர்வ அனுமதி தேவைப்படும்.

இவையும் உங்களுக்குப் பிடிக்கலாம்

தாங்கள் இணைவது குறித்து ஸ்டார்ஹப்பும் எம்1உம் 2024ஆம் ஆண்டு ஆராய்ந்ததாகத் தெரிவிக்கப்பட்டது. ஆனால், ஒப்பந்தம் ஏதும் எட்டப்படவில்லை.

ஒப்பந்தம் எட்டப்பட்டால் தெமாசெக் நிறுவனத்துடன் தொடர்புடைய இரு தொலைத்தொடர்பு நிறுவனங்கள் ஒன்றிணையும். ஸ்டார்ஹப், கெப்பல் இரண்டிலும் தெமாசெக், முடிவெடுக்கும் அதிகாரத்துக்குத் தேவைப்படும் அளவில் பங்குகளுக்கு உரிமை வகிக்கிறது.

ஸ்டார்ஹப், கைப்பேசிச் சேவை மூலம் ஈட்டும் வருவாய் ஆண்டு அடிப்படையில் இவ்வாண்டு முற்பாதியில் 10.5 விழுக்காடு குறைந்து 245.3 மில்லியன் வெள்ளியாகப் பதிவானது.