📅 Thursday, 10 September 2026 IST | ஆவணி 25, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Cinema September 04, 2026 08:04 AM

சட்டை இல்லாத கோட்.. நயன்தாரா அக்கா ட்ரோல்.. 'Toxic' படத்தை கிழித்து தொங்கவிட்ட பரிதாபங்கள் டீம்!

சட்டை இல்லாத கோட்.. நயன்தாரா அக்கா ட்ரோல்.. 'Toxic' படத்தை கிழித்து தொங்கவிட்ட பரிதாபங்கள் டீம்!

சென்னை: 'கே.ஜி.எஃப்' படங்களின் பிரம்மாண்ட வெற்றிக்கு பிறகு கன்னட நடிகர் யாஷ், அடுத்த எந்த கதைக்களத்தில் நடிக்க போறாரு, படத்தின் இயக்குனர் யார் என்பது குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் பெரு அளவில் இருந்தது. அந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் தான் டாக்ஸிக் திரைப்படத்தினுடைய அறிவிப்பு வெளியானது. கிட்டத்தட்ட 3 ஆண்டு காத்திருப்புக்கு பின் வெளியான திரைப்படம் டாஃஸிக் திரைப்படம் 7 நாட்களில் உலகம் முழுவதும் ₹300 கோடிக்கும் மேல் வசூலித்து மாஸ் காட்டி வருகிறது. இருப்பினும், படம் முழுவதும் ஒரே ரத்த களறியாகவும், கதை இல்லாமலும், எல்லை மீறிய அருவருக்கத்தக்க இன்டிமேட் காட்சிகள் நிறைந்துள்ளதாகவும் ரசிகர்கள் மத்தியில் கடுமையான விமர்சனங்களும் ட்ரோல்களும் குவிந்து வருகின்றன.

இந்நிலையில், இந்த நெகட்டிவ் விமர்சனங்களையே தனக்கு சாதகமாக்கி, பிரபல யூடியூப் ஜோடியான 'பரிதாபங்கள்' கோபி மற்றும் சுதாகர் வெளியீடு செய்துள்ள ட்ரோல் வீடியோ இணையத்தில் காட்டுத்தீ போல் பரவி வருகிறது. பரிதாபங்கள் டீம் இந்த வீடியோவில் 'டாஃஸிக்' படத்தின் ஒவ்வொரு விஷயத்தையும் பார்த்து பார்த்து செதுக்கி சீண்டியுள்ளனர்.

யாஷ் லுக் ஸ்பூஃப்: டாக்ஸிக் படத்தில் யாஷ் வருவது போலவே, சட்டையே போடாமல் வெறும் உடம்பில் கோட் அணிந்து, அடர்ந்த தாடியுடன் சுதாகர் செய்த அலப்பறைகள் சிரிப்பலைகளை ஏற்படுத்தியுள்ளது. படத்தில் யாஷின் அக்காவாக நயன்தாரா நடித்திருப்பதை வைத்து, சுதாகரிடம் கோபி, இவங்க உங்க அக்கா தானே... நீ எந்நேரமும் தண்ணி அடிச்சுட்டே இருக்கீயே, உங்க அக்கா கேட்கவே மாட்டாங்களா? என கேட்க, அதற்கு சுதாகர், "நான் என்ன வேணாலும் பண்ணுவேன் அக்கா கேட்க மாட்டா... அக்கா என்ன வேணாலும் பண்ணுவா நான் கேட்க மாட்டேன் எனப் பேசுவது வேற லெவல் கலாய்ப்பாக அமைந்தது.

பஞ்ச் வசனங்கள்: 'டாஃஸிக்' படத்தில் எந்த ஒரு வசனமும் ரசிக்கும்படி இல்லை, புரியவே இல்லை என்பதை சுட்டிக்காட்டும் வகையில், கோபி பேசிய வசனங்கள் குபீர் சிரிப்பை வரவைத்துள்ளது. அதாவது "ராத்திரி இருட்டா இருக்கும்... பகல் வெளிச்சமா இருக்கும், மழைக்காலத்துல மழை பெய்யும்... வெயில் காலத்துல வெயில் அடிக்கும் என படத்தில் வரும் மொக்கை பஞ்ச் வசனங்களை அப்படியே கவுண்டர் கொடுத்து பங்கமாக்கியுள்ளனர். படத்தில் யாஷ் யாரை சுடுகிறார், எதற்காக சுடுகிறார் என, எதுவுமே தெரியாது ஆனால், அனைவரையும் துப்பாக்கியால் சுட்டு தள்ளுவதை வேலையாக வைத்து இருப்பார். அதை கிண்டலடிக்கும் வகையில் தெருவில் அமைதியாக இடியாப்பம் விற்றுக் கொண்டு போனவனை சுட்டுத் தள்ளுவது, சும்மா வழி கேட்டு வந்த அப்பாவியை சுட்டுத்தள்ளுவதுஎன 'டாஃஸிக்' படத்தின் ஆக்‌ஷன் காட்சிகளை பரிதாபங்கள் டீம் மிக கொடூரமாக ட்ரோல் செய்து பங்கம் பண்ணியுள்ளது.

அதே போல படத்தில் வரும் பல கசமுசா காட்சியை கிண்டலடித்து அனைவரும் நைட்டி போட்டி ஆட்டம் போட்டுள்ளனர். தற்போது சோஷியல் மீடியாவில் டிரெண்டிங்கில் முதலிடத்தில் இருக்கும் இந்தப் 'பரிதாபங்கள்' ட்ரோல் வீடியோவை பார்த்துவிட்டு, படைப்பாளிகள் சொன்ன விமர்சனத்தை விட கோபி-சுதாகர் சொன்னதுதான் கச்சிதமா இருக்கு என ரசிகர்கள் வயிறு வலிக்க சிரித்து கமெண்ட் செய்து வருகின்றனர்.