சரபோஜி கல்லூரி தமிழ்பாடத்தில் இயக்குநர் சீனுராமசாமியின் கவிதை நூல் இணைப்பு..!
பெருமைக்குரிய தஞ்சை சரபோஜி மன்னர் கல்லூரியின் தமிழ்ப் பாடத்திட்டத்தில் சீனுராமசாமியின் நூலானது பாடமாக இணைக்கப்பட்டுள்ளது. இது குறித்து சீனுராமசாமி தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது
பெருமைக்குரிய தஞ்சை சரபோஜி மன்னர் கல்லூரியின் தமிழ்ப் பாடத்திட்டத்தில் என் கவிதை நூல்கள் இணைக்கப்பட்டிருப்பது நெகிழ்ச்சியளிக்கிறது.
சீனுராமசாமி அக்டோபர் 13, 1973 ஆம் ஆண்டு மதுரையில் பிறந்தார் . இவர் தமிழில் திரைப்படம் , திரைக்கதை வசனம், சிறுகதை ஆகியவற்றை தமிழுலகத்திற்கு படைப்புகளாக வெளியிட்டுள்ளார்
இளங்கலைத் (B.A.) தமிழ்ப் பாடத்திட்டத்தில் வேரல் பதிப்பகம் வெளியிட்ட 'தயை' மற்றும் முதுகலைத் (M.A.) தமிழ்ப் பாடத்திட்டத்தில் மீ பதிப்பகம் வெளியிட்ட 'நிலத்தவள்' ஆகியவை சேர்க்கப்பட்டுள்ளன.
என் படைப்புகளைத் தேர்வு செய்த தமிழ்ப் பேராசிரியர்கள் மற்றும் பாடத்திட்டக் குழுவினருக்கு என் இதயபூர்வமான நன்றியும் வாழ்த்துகளும் என்று தெரிவித்துள்ளார்.
ஒளிரும் வகுப்பறைகள்,பெறும் மௌனங்கள் - கவிதைகள் மற்றும் சிந்தனைகள் அடங்கிய தொகுப்பு.நினைவில் ஒளிரும் ஜிமிக்கிக் கம்மல் கவிதை நூல்,புகார்பெட்டியின் மீது படுத்துறங்கும் பூனை - பரவலாக அறியப்பட்ட கவிதை மற்றும் படைப்புத் தொகுப்பு,மணல் உயிர் - சினிமாவுன் ஆன்மா,தயை,ஒரு வீட்டைப் பற்றிய உரையாடல் போன்ற கவிதை , சிறுகதை போன்ற நூல்களை சீனுராமசாமி வெளியிட்டுள்ளார்.
சமுதாயத்தின் எதார்த்தம்
பொதுவாக சீனுராமசாமியின் படங்கள், பெண்களின் கதாப்பாத்திரத்திற்கு முன்னுரிமை , சமூக வாழ்வியலின் எதார்த்த தன்மை ,குடும்ப கட்டமைப்பின் வாழ்வியல் ஆகியவற்றை இவரின் திரைப்படங்கள் பிரதிப்பலிக்கிறது.