📅 Tuesday, 08 September 2026 IST | ஆவணி 23, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Tamil Nadu September 08, 2026 05:03 AM

 சிறை நிரப்பும் போராட்டம்: மாற்றுத்திறனாளிகள் கைது

 சிறை நிரப்பும் போராட்டம்: மாற்றுத்திறனாளிகள் கைது

மதுரை: மதுரையில் உதவித்தொகையை உயர்த்தக் கோரி மாற்றுத்திறனாளிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தற்போது வழங்கப்படும் ரூ.ஆயிரம், ரூ. 2ஆயிரம் உதவித்தொகையை ரூ. 6 ஆயிரமாக உயர்த்தித்தர வேண்டும் எனக் கோரி நேற்று மாநில அளவில் சிறைநிரப்பும் போராட்டத்தில் ஈடுபட்டனர். மதுரையில் அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் போராட்டம் நடந்தது. மாநில உதவித் தலைவர் தவமணி தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் பாலமுருகன் முன்னிலை வகித்தார். தலைவர் மதிபாரதி, பொருளாளர் மணிகண்டன் உட்பட பலர் பங்கேற்றனர். கலெக்டர் அலுவலக வாயில்களை மறித்து, கேட்களை பூட்டி போராடியதால் 150 பேரை போலீசார் கைது செய்து மாலையில் விடுவித்தனர்.

குறைதீர் கூட்டத்தில் தர்ணா அதேநேரத்தில் மேலக்குயில்குடியில் இலவச வீட்டுமனை வழங்கப்பட்ட நிலையில், சின்னக்கண்ணு, ராஜாகண்ணு ஆகியோரின் இடத்தை சிலர் ஆக்கிரமித்துள்ளனர். அதை மீட்டுத் தரவேண்டும் எனக்கூறி பார்வையற்றோர் நலச்சங்கத்தினர் சிலர் குறைதீர் கூட்டத்திற்கு வந்தனர். அவர்கள் கூட்ட அரங்கில் அதிகாரிகள் முன்னிலையில் அமர்ந்தும், படுத்தும் தர்ணாவில் ஈடுபட்டனர். அவர்கள் கூறுகையில், ''சுதந்திர தின நாளில் எங்களை அந்த இடத்தில் குடியமர்த்துவதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்தது. ஆனால் இதுவரை நடவடிக்கை இல்லை. எங்கள் இடத்தை உடனே மீட்டுத்தர வேண்டும்'' என்றனர்.

உசிலம்பட்டி ஆர்.டி.ஓ., அலுவலகம் முன்பு போராட்டம் நடந்தது.

மாவட்டச் செயலாளர் முருகன், ஒன்றிய நிர்வாகிகள் நாகராஜ், சின்னசாமி, தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டச் செயலாளர் முத்துராணி, மா.கம்யூ., ஒன்றிய செயலாளர் ராமர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

195 பேர் கைது செய்யப்பட்டனர்.