சிங்கப்பூர் அதிபர் இறுதி சடங்கில் ‘தஞ்சாவூரு மண்ணெடுத்து‘.. மேடையில் கொந்தளித்த ரஜினி.. தேவா சாதனை!
சென்னை: இசைப்பாளரும் பாடகருமான தேனிசை தென்றல் தேவா மாரடைப்பால் உயிரிழந்தார். அவருக்கு வயது 75. அவரின் மறைவு இசைப்பிரியர்களையும், அவரின் ரசிகர்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ள நிலையில், தமிழக முதலமைச்சர் விஜய் உட்பட பல தலைவர்களும் பிரபலங்களும் தங்களது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர். தேவா தனது இசை பயணத்தில் சந்தித்த மறக்க முடியாத அனுபவங்கள் மற்றும் சோதனைகள் குறித்து ரஜினி மேடையில் பேசிய பழைய பேட்டி ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது.
தஞ்சாவூர் மண்ணெடுத்து : அதில், சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற பிரம்மாண்ட நேரடி இசைக்கச்சேரி நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கலந்து கொண்டு பேசினார். அவர் அந்த மேடையில் கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் என்னை பற்றி பேசினார். இயக்குநர் சேரன் இயக்கத்தில் நான் இசையமைத்த 'பொற்காலம்' படத்தில் இடம்பெற்ற தஞ்சாவூரு மண்ணெடுத்து பாடல் சிங்கப்பூரின் முன்னாள் அதிபர் எஸ்.ஆர். நாதன் அவர்களுக்கு மிகவும் பிடிக்கும். அவர் இறப்பதற்கு முன்பு, நான் இறந்த பிறகு என்னுடைய இறுதி சடங்கின்போது தேவாவின் இந்த தஞ்சாவூரு மண்ணெடுத்து பாடலை ஒலிக்க செய்துதான் என் உடலை அடக்கம் செய்ய வேண்டும் என்று தனது உயிலிலேயே எழுதி வைத்திருந்தார்.சிங்கப்பூர் அதிபரின் இறுதி சடங்கில் அந்த பாடல் ஒலிக்கப்பட்டது.