📅 Tuesday, 06 October 2026 IST | புரட்டாசி 20, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Tamil Nadu October 06, 2026 01:02 AM

செவிலியர்களை கைது செய்தது சரியான அணுகுமுறை அல்ல

செவிலியர்களை கைது செய்தது சரியான அணுகுமுறை அல்ல

சென்னையில் பணி நிரந்தரம் கோரி போராடிய செவிலியர்கள் கைது செய்யப்பட்டதற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

பணி நிரந்தரம், பணி பாதுகாப்பு, நிலுவைத் தொகை, ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு இடைநிலை சுகாதாரப் பணியாளர்கள் சங்கம் சார்பில் இன்று சென்னை ராஜரத்தினம் மைதானத்தின் அருகே செவிலியர்கள் போராட்டம் நடைபெற்றது.

இதில் ஆயிரக்கணக்கான செவிலியர்கள் இன்று காலை முதல் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மாலையில் அவர்களை காவல்துறை குண்டுகட்டாக கைது செய்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முன்னதாக பேச்சுவார்த்தைக்காக ஐந்து பிரதிநிதிகளை இரவு 7 மணிக்கு, தலைமைச் செயலகம் அழைத்துச் சென்று அவர்களை கைது செய்ததாக செவிலியர்களுக்கான வழக்கறிஞர் தெரிவித்துள்ளதும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

கம்யூனிஸ்ட் அறிக்கை

இந்நிலையில் இது குறித்து இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

"சென்னையில் பணி நிரந்தரம் ,ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராடுகின்ற செவிலியர்களை அழைத்து பேசி கோரிக்கைகளை நிறைவேற்றாமல், அவர்களை தமிழ்நாடு அரசு கைது செய்திருப்பது சரியான அணுகுமுறையல்ல.

கோரிக்கைகள்

கைது செய்யப்பட்டுள்ள அனைத்து செவிலியர் சங்க நிர்வாகிகளையும், செவிலியர்களையும் தமிழ்நாடு அரசு உடனடியாக விடுவிக்க வேண்டும்.

செவிலியர் சங்க நிர்வாகிகளை அழைத்துப் பேசி அவர்களது கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டுமென இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு தமிழ்நாடு அரசை வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறது." என தெரிவிக்கப்பட்டுள்ளது.