📅 Monday, 12 October 2026 IST | புரட்டாசி 26, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Politics October 12, 2026 08:04 AM

சென்னையில் கருப்பு பலூன்கள் பறக்கவிட்ட இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் 4 பேர் கைது

சென்னையில் கருப்பு பலூன்கள் பறக்கவிட்ட இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் 4 பேர் கைது

பூந்தமல்லியில் இருந்து வடபழனி வரையிலான மெட்ரோ ரெயில் சேவையை பிரதமர் மோடி யும், முதல்-அமைச்சர் விஜய்யும் நேற்று கொடியசைத்து தொடங்கி வைத்தனர். பின்னர் இருவரும் போரூரில் இருந்து பூந்தமல்லி வரை மெட்ரோ ரெயிலில் பயணம் செய்தனர்.

கருப்பு பலூன்கள்

இதைகண்ட பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், கருப்பு பலூன்களை பறக்கவிட்டவர்களை மடக்கிப்பிடித்து போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரித்தனர். விசாரணையில், அவர்கள் ஆவடி பகுதியைச் சேர்ந்த இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் என்பது தெரியவந்தது.

டெல்லியில் தலைமைத் தேர்தல் அதிகாரியை பதவி விலக கோரி காங்கிரசார் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், மெட்ரோ ரெயில் திட்டத் தொடக்க விழாவில் பங்கேற்க பிரதமர் மோடி தமிழகம் வந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்பு பலூன்களை பறக்கவிட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் 4 பேரையும் போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.