📅 Friday, 09 October 2026 IST | புரட்டாசி 23, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Politics October 09, 2026 12:03 AM

செங்கல்பட்டு அருகே வாக்கு எண்ணும் மையத்தில் 3 அடுக்கு பாதுகாப்பு: மாவட்ட எஸ்பி அய்மன் ஜமால் தகவல்

செங்கல்பட்டு அருகே வாக்கு எண்ணும் மையத்தில் 3 அடுக்கு பாதுகாப்பு: மாவட்ட எஸ்பி அய்மன் ஜமால் தகவல்

செங்கல்பட்டு அருகே வாக்கு எண்ணும் மையத்தில் 3 அடுக்கு பாதுகாப்பு: மாவட்ட எஸ்பி அய்மன் ஜமால் தகவல்

செங்கல்பட்டு: மதுராந்தகம் (தனி) தொகுதியில் நேற்று இடைத்தேர்தல் நடைபெற்று முடிந்தது. இதில் 285 மையங்களில் வாக்குப்பதிவு நடைபெற்றது. இத்தொகுதியில் 86.26 சதவீத வாக்குகள் பதிவானதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், அனைத்து மையங்களில் இருந்தும் நேற்றிரவு முதல் இன்று அதிகாலை வரை வாக்குப்பதிவு இயந்திரங்கள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வாகனங்களில் எடுத்து வரப்பட்டன. பின்னர் அவை அனைத்தும் இன்று காலை செங்கல்பட்டு அருகே ஆத்தூரில் உள்ள சமூக மேம்பாட்டுக்கான ஒருங்கிணைந்த பயிற்சி மையத்தில் உள்ள வாக்கு எண்ணும் மையத்தில் உள்ள பாதுகாப்பு அறைகளில் வைத்து பூட்டி சீல் வைக்கும் பணிகள் நடைபெற்றது.

இப்பணிகளை செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் வீரப்பன், மாவட்ட எஸ்பி அய்மன் ஜமால் உள்பட பல்வேறு அரசு அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு ஆய்வு நடத்தினர். வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டு உள்ள பாதுகாப்பு அறைகளின் முன்பு போலீசார் துப்பாக்கிகளுடன் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இங்கு வரும் 9ம் தேதி வாக்கு எண்ணும் பணி நடைபெறுகிறது. இதுகுறித்து செங்கல்பட்டு மாவட்ட காவல்துறை எஸ்பி அய்மன் ஜமால் கூறுகையில், இங்குள்ள பாதுகாப்பு அறைகளில் வாக்குப்பதிவு இயந்திரங்களை வைத்து, அந்த அறைகளை பூட்டி சீல் வைத்து, வாக்கு எண்ணும் மைய பாதுகாக்கும் பணிகளில் 5 டிஎஸ்பி, 10 இன்ஸ்பெக்டர் உள்பட 150 போலீசார் இரவுபகலாக பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த வாக்கு எண்ணும் மையத்தில் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும், வாக்கு எண்ணும் மையத்தில் குடிநீர், கழிவறை உள்பட அனைத்து அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டு பாதுகாப்பு ஏற்பாடுகளும் பலப்படுத்தப்பட்டு உள்ளது. இம்மையத்தின் அனைத்து பகுதிகளிலும் சிசிடிவி காமிராக்கள் பொருத்தப்பட்டு, வெளியாட்கள் நுழைவதை தடுக்கும் வகையில் கண்காணிப்பு பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன என்று மாவட்ட எஸ்பி அய்மன் ஜமால் தகவல் தெரிவித்துள்ளார்.