📅 Saturday, 19 September 2026 IST | புரட்டாசி 3, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Cinema September 19, 2026 06:30 PM

“அது யாரையும் குறிவைச்சு சொன்னது இல்ல!”

“அது யாரையும் குறிவைச்சு சொன்னது இல்ல!”

“அது யாரையும் குறிவைச்சு சொன்னது இல்ல!” – விஜய் குறித்த கருத்து.. VJS விளக்கம்!

கடந்த வாரம் தனது பேச்சால் எழுந்த சர்ச்சைக்கு விஜய் சேதுபதி, அது பிக் பாஸ் வீட்டில் நடந்த சம்பவங்களை மட்டுமே குறிப்பிட்டது என இன்றைய எபிசோடில் விளக்கம் அளிக்கிறார்.

பிக் பாஸ் வீட்டுக்குள்ள சண்டை நடக்குதா... வெளியே ரசிகர்கள் சண்டை போடுறாங்களா? கடந்த வாரம் விஜய் சேதுபதி பேசிய சில வார்த்தைகள் அப்படியொரு விவாதத்தைக் கிளப்பிவிட்டன!

“தலைவர் என்றால் என்னவென்று தெரியாமல்... தலைமைப் பண்பு என்றால் என்னவென்று தெரியாமல், வாக்குறுதிகளை அள்ளிவிட்டு, கடைசியில் எதிரணியை குற்றம்சாட்டிவிட்டு ஓடுவது தலைமைக்கான தகுதி இல்லை... அது ஏமாற்று வேலை” என்று போட்டியாளர்களை நோக்கி விஜய் சேதுபதி பேசியிருந்தார்.

அவ்வளவுதான்... “யாரை சொல்றாரு?” “யாரை குறிவைத்து இந்தப் பேச்சு?” என சோஷியல் மீடியாவில் விவாதம் சூடுபிடித்தது.

விஷயம் இப்படி விஸ்வரூபம் எடுத்த நிலையில், இன்றைய எபிசோடில் மைக்கை கையில் எடுத்து தனது தரப்பு விளக்கத்தை கொடுக்கிறார் விஜய் சேதுபதி.

அவர் சொல்ல வருவது ஒன்றுதான்... “நான் சொன்னது பிக் பாஸ் வீட்டுக்குள்ள நடந்த விஷயத்தைப் பற்றித்தான்!”

“அது பிக் பாஸ் வீட்டுக்குள் நடந்த விஷயத்தைப் பற்றித்தான்...”

கடந்த வாரம் தான் தெரிவித்த கருத்துகள், பிக் பாஸ் வீட்டில் இருக்கும் போட்டியாளர்கள் மற்றும் அவர்கள் விளையாடும் விதத்தை மட்டுமே குறிப்பதாக அவர் விளக்கம் அளிக்கிறார். நிகழ்ச்சிக்கு வெளியே இருக்கும் யாரையும் குறிப்பிட்டு அந்த வார்த்தைகள் பேசப்படவில்லை என்றும் தெளிவுபடுத்துகிறார்.

தான் பேசிய சூழல் அனைவருக்கும் புரிந்திருக்கும் என்று நினைத்ததால், தனியாக விளக்கம் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை என முதலில் கருதியதாகவும் விஜய் சேதுபதி கூறுகிறார். ஆனால், அந்தப் பேச்சு தொடர்ந்து விவாதத்துக்கு உள்ளானதால் தற்போது தனது தரப்பில் இருந்து விளக்கம் அளிப்பதாகத் தெரிவிக்கிறார்.

அப்படியென்றால் கடந்த வாரம் விஜய் சேதுபதி பேசியது யாரை குறிவைத்து?

தனது பேச்சுக்கான காரணத்தையும், அதன் பின்னணியையும் இன்றைய எபிசோடில் விஜய் சேதுபதி மேலும் விளக்குவாரா? கடந்த வார சர்ச்சைக்கு இதுதான் முற்றுப்புள்ளியா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.