📅 Saturday, 17 October 2026 IST | புரட்டாசி 31, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Politics October 17, 2026 11:04 AM

அதிமுகவை லெட்டர்பேட் கட்சியாக மாற்றிவிட்டார் இபிஎஸ்; நிர்மல் குமார்

அதிமுகவை லெட்டர்பேட் கட்சியாக மாற்றிவிட்டார் இபிஎஸ்; நிர்மல் குமார்

மதுரை: அதிமுகவினர் கட்சி தாவுவது குறித்து மதுரையில் அமைச்சர் நிர்மல் குமார் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

அவர் பேசியதாவது; எந்தத் திட்டத்திலும் எந்தத் திட்டமும் முடங்காது. முதல்வர் விஜய் நிதிநிலையை ஆராய்ந்து திட்டங்களை அறிவிக்கிறார். வெற்றிப் பயணம் திட்டம் குறித்து தவறான தகவல் பரப்புகின்றனர். முந்தைய அரசு (திமுக) போட்ட பல டெண்டர்களை ரத்து செய்துள்ளோம். டெண்டர்களில் போடப்பட்டுள்ள கொள்கை, விதிகளை பார்க்கிறோம். அதில், ஒரு குறிப்பிட்ட நிறுவனங்கள் மட்டுமே பங்கேற்பது போன்று இருக்கிறது. நிறைய பேர் பங்கேற்றால் தான் குறைந்த விலையில் டெண்டர் கிடைக்கும்.

தவெகவில் தவறு செய்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கைது செய்யப்பட்டு, நடவடிக்கை எடுக்கப்படுகிறது. மெத்தபட்டைமன் இந்த 5 வருடமாக தான் குழப்பத்தில் உள்ளது. திமுக ஆட்சியில் ஜாபர் சாதிக்கினால் தான் தமிழகத்தில் கொண்டு வரப்பட்டது. இதே திமுகவாக இருந்தால் மெத்தபட்டமைனே இல்லை, அது கோலப்பொடி என்று வழக்கை முடித்து இருப்பார்கள்.

முஸ்லிமாக மதம் மாறிய ஹிந்துக்களுக்கு இடஒதுக்கீடு தொடர்பாக அனைத்து முஸ்லிம் கட்சி, அமைப்பினரிடம் கலந்து ஆலோசனை நடத்திய பிறகு தான் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

ஸ்டாலின் இன்னும் கனவு உலகத்திலேயே இருக்கிறார். நிஜ வாழ்க்கைக்கு அவர் வரவில்லை. கோவையில் கட்டப்பட்ட அறிவுலகம் அவர்களின் சொந்த பணத்தில் கட்டவில்லை. கடந்த 5 ஆண்டுகளாக அவர்கள் புதிதாக எந்த திட்டத்தையும் கொண்டு வரவில்லை.

திமுக, அதிமுகவும் ஒன்றாக இணைந்து ஆட்சியமைக்க முயன்றனர். இதனால் தான் அதிமுகவில் இருந்து முக்கிய நிர்வாகிகள் வெளியேறி வருகின்றனர். இபிஎஸ்ஸின் முடிவை அதிமுக தலைமை அலுவலகத்தின் செங்கல் கூட ஏற்றுக் கொள்ளக் கூடாது. அவருடன் யாராலும் இணைந்து பயணிக்க முடியாது. கட்சியின்யை இந்த மோசமான நிலைக்கு இபிஎஸ்ஸின் தனிப்பட்ட சுயநலமே காரணம்.

இபிஎஸ் தலைமையில் அதிமுக மிக மோசமான நிலையில் உள்ளது. லெட்டர் பேட் கட்சியாக இபிஎஸ் அதிமுகவை மாற்றி விட்டார். அதிமுகவை திமுகவிடம் அடமானம் வைக்க அவர் முயற்சி மேற்கொண்டார், இவ்வாறு அவர் கூறினார்.